சிறப்பு பட்டிமன்றம் முதல் டிடி நெக்ஸ்ட் வரை.. ஜீ தமிழில் விநாயகர் சதுர்த்திக்கு இதுதான் போட்றாங்க..!
விநாயகர் சதுர்த்தி நன்னாளில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை கீழே காணலாம்.

விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பிரபலமான பண்டிகையாகும். தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி:
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது என்பதை கீழே காணலாம்?
சிறப்பு பண்டிகை தினங்களில் ரியாலிட்டி ஷோக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. செலுத்தி வருகிறது.
சிறப்பு பட்டிமன்றம்:
காலை 8 முதல் 9:30 மணி வரை கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் " மாற வேண்டியவர்கள் பிள்ளைளா? பெற்றோர்களா? என்ற தலைப்பில் எழிலரசி, வழக்கறிஞர் அருண், பேராசிரியர் பழனி, செந்தமிழ் செல்வி திருமதி சாந்தாமணி, திரு நீலகண்டன், சொல்லரசி பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்கு பெறும் அறிவும், சிரிப்பும் கலந்த சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
சிறப்புத் திரைப்படம்:
இதனை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சாய் தாரம் தேஜ், சம்யுக்தா மேனன், சுனில் என பல திரையுலக பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற விருபாக்ஷா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
தி ரோடு:
த்ரிஷா, சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தி ரோடு திரைப்படம் மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகிறது. சாலை விபத்தில் சிக்கிய திரிஷா தனது கணவனையும் குழந்தையையும் இழக்க இந்த விபத்தில் மறைந்து கிடக்கும் மர்மத்தை கண்டு பிடிக்க திரிஷா போராடுவது தான் இந்த படத்தின் கதைக்களம்.
ரியாலிட்டி ஷோக்கள்:
மதியம் 3 மணிக்கு Zee தமிழின் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள் மற்றும் உங்களின் பேவரைட் Zee பிரபலங்கள் ஒன்றிணைந்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என தூள் கிளப்பும் விநாயகர் சதுர்த்தி மெகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.
மாலை கொண்டாட்டம்:
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நிறைவாக மாலை 5 மணிக்கு சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அமானுஷ்ய த்ரில்லர் மற்றும் காமெடி திரைப்படமான DD நெஸ்ட் லெவல் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.





















