புது கட்சி தொடங்குவது எப்போது? தேதி குறித்த மல்லை சத்யா? காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேட்டி!
"காஞ்சிபுரத்தில் செப்.15 ஆம் தேதி அண்ணா பிறந்தாளில் முப்பெரும் விழா நடைபெறும் என்று மதிமுக மல்லை சத்யா அறிவிப்பு"

துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் இருந்து இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு வாக்கு பாஜகவிற்கு மாற்ற வாய்ப்பு உள்ளது - மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் பேட்டி
மதிமுகவில் உட்கட்சி மோதல்
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. தற்போது மல்லை சத்யா மதிமுகவிலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
பதவியில் இருந்து மல்லை சத்யா நீக்கம்
தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மலை சத்யா கூறியிருந்தார். இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மல்லை சத்யாவை தற்காலிகமாக துணை பொது செயலாளர் பதவியில், இருந்து நீக்கம் செய்து கட்சியின் தலைவர் வைகோ அறிவித்திருந்தார்.
காஞ்சிபுரத்தில் ஆலோசனை கூட்டம்
இதனிடையே செப்டம்பர் 15ல் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவர் பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழா நடத்த மல்லை சத்யா முடிவு செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் முற்பொருள் விழா கொண்டாட்டத்தில் இடம் தேர்வு செய்வோம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெறவும் மல்லை சத்யா காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த நிலையில் அவர்கள் ஆதரவாளருடன் இன்று சந்தித்து அடுத்த கட்ட நகர்வல்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
மல்லை சத்யா தெரிவித்தது என்ன?
இதனைத் தொடர்ந்து மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது : காஞ்சிபுரத்தில் செப்.15ஆம் தேதி அண்ணா பிறந்தாளில் முப்பெரும் விழா நடைபெறும் என்று மதிமுக மல்லை சத்யா அறிவித்தார். திராவிட சித்தம் உள்ள நபருக்கு திராவிட பாரத ரத்னா விருது வழங்க உள்ளோம். புதிய கட்சி தொடங்கி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழாவில் பதில் கிடைக்கும் என மறைமுகமாக தெரிவித்தார். துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் இருந்து இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு வாக்கு பாஜகவிற்கு மாற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.





















