Coolie Box Office Collection: 400 கோடி இருக்கட்டும்.. தமிழில் மட்டும் கூலி வசூல் எவ்வளவு? ராஜாங்கம் நடத்தினாரா ரஜினி?
கூலி படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை கீழே காணலாம்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சுதந்திர தின கொண்டாட்டமாக கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.
வசூல் வேட்டை நடத்தும் கூலி:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படம் வெளியானது. படத்தில் அதிக வன்முறை காட்சிகள், ஏ சான்றிதழ் உள்ளிட்டவை ஆகிய காரணங்களால் குடும்ப ரசிகர்கள் சென்று பார்க்க முடியாத சூழலிலும், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் படத்தின் வசூல் ஓரளவு குவிந்து வருகிறது.
படம் இதுவரை அதிகாரப்பூர்வமாக 400 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ரூபாய் 258.3 கோடியை வசூல் செய்துள்ளது. இதில் எந்தெந்த மொழிகளில் எத்தனை கோடியை வசூல் செய்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
தமிழில் மட்டும் எத்தனை கோடி வசூல்?
இந்தியாவில் மட்டும் கூலி படம் தமிழில் எவ்வளவு வசூல் செய்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
கூலி ( தமிழ்)
முதல் நாள் - ரூபாய் 44.5 கோடி
2வது நாள் - ரூ.34.5 கோடி
3வது நாள் - ரூ. 25.75 கோடி
4வது நாள் - ரூ.23.3 கோடி
5வது நாள் - ரூ. 7.75 கோடி
6வது நாள் - ரூ. 5.56 கோடி
7வது நாள் - ரூ. 4.7 கோடி
8வது நாள் - ரூ. 3.8 கோடி
9வது நாள் - ரூ. 3.4 கோடி
10வது நாள் - ரூ.6.35 கோடி
11வது நாள் - ரூ.6.9 கோடி
தமிழில் மட்டும் இதுவரை கடந்த 11 நாட்களில் ரூபாய் 166.51 கோடி வசூலை எட்டியுள்ளது.
கூலி (தெலுங்கு)
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் கூலி படம் நல்ல வசூலை எட்டியுள்ளது. இந்தியாவில் தெலுங்கில் மட்டும் கூலி படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை கீழே காணலாம்.
முதல் நாள் - ரூ.15.5 கோடி
2வது நாள் - ரூ.13.5 கோடி
3வது நாள் -ரூ.9.25 கோடி
4வது நாள் - ரூ.6.85 கோடி
5வது நாள் - ரூ.2.25 கோடி
6வது நாள் - ரூ.1.75 கோடி
7வது நாள் - ரூ.1.4 கோடி
8வது நாள் - ரூ.1.1 கோடி
9வது நாள் - ரூ.1.1 கோடி
10வது நாள் - ரூ 1.75 கோடி
11வது நாள் - ரூ.1.75 கோடி
இந்தியாவில் மட்டும் தெலுங்கில் வெளியான கூலி படம் ரூபாய் 56.2 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கின் உச்சநட்சத்திர நடிகரான நாகர்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பதால் தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தி, கன்னடத்தில் எப்படி?
இந்தியில் கூலி படம் கடந்த 11 நாட்களில் சுமார் 30 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் - ஜுனியர் என்டிஆர் இருவரும் நடித்து வெளியான வார் படத்திற்கு மத்தியிலும் கூலி படம் சுமார் 30 கோடி ரூபாயை குவித்துள்ளது. கன்னடத்தில் வெளியான கூலி படம் ரூபாய் 2.5 கோடி வசூலை குவித்துள்ளது. அதற்கு அமீர்கான் இந்த படத்தில் இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேறு எந்த பெரிய படமும் தற்போது வரை வெளியாகாததால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையிலும் அரங்கம் நிறைந்த காட்சியாக கூலி ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கூலி படம் நல்ல வசூலை குவித்துள்ளது.





















