மேலும் அறிய
Advertisement
TN Agri Budget Highlights: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? ஓர் அலசல்
தமிழ்நாடு அரசின் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தமிழ்நாட்டின் 2023-2024ம் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அவரது அறிவிப்பில் வெளியான பல்வேறு முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.
- சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொாகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் உயர்த்தி ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூபாய் 195 கூடுதலாக வழங்கப்படும்.
- தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்திட 200 ஏக்கர்பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறிய ஊர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், மற்ற பணிகளையும் மேற்கொள்வதற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூபாய் 230 கோடி நிதி ஒதுக்கீடு
- தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்பட்டு சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளது. மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூபாய் 64 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.
- அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ரூபாய் 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீலகிரியில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 50 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.
- 75 லட்சம் செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படும். இதற்கு மத்திய –மாநில அரசு நிதியில் இருந்து ரூபாய் 15 கோடி ஒதுக்கப்படும்.
ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க:TN Agri Budget 2023 LIVE: சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு
மேலும் படிக்க: TN Agri Budget: ரேஷன் கடைகளில் இனிமேல் கேழ்வரகு, கம்பு - வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion