TVK Vijay: புகார் வந்துச்சுன்னா அவ்ளோதான்... நிர்வாகிகளை எச்சரித்த விஜய்...
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மக்களுக்காக உழைக்கணும்னு அட்வைஸ் பண்ணியிருக்கற விஜய், யார் மேலயாவது புகார் வந்தா, நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காதுன்னும் எச்சரிச்சு இருக்காராம்.

தமிழ்நாட்டில் அடுத்த வருஷம் சட்டமன்ற தேர்தல் வர்றதுனால, தன்னோட கட்சிய பலப்படுத்தற வேலைல விஜய் தீவிரமா இறங்கியிருக்கார். அதன் ஒரு பகுதியா, கட்சியோட மாவட்ட பொறுப்பாளர்கள நியமிச்சுட்டு வர்றார். ஏற்கனவே 19 மாவட்ட செயலாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியான நிலையில, இன்னைக்கு(29.01.25) இரண்டாம் கட்ட பட்டியல வெளியிட்டு இருக்கார். அது மட்டுமில்ல, அதுக்கு முன்னாடி நடந்த ஆலோசனை கூட்டத்துல, முக்கியமான விஷயங்கள பத்தி பேசியிருக்கார் விஜய். அது என்னன்னு பார்க்கலாம்.
நிர்வாகிகளை எச்சரித்த தவெக தலைவர் விஜய்
இன்னைக்கு சென்னை பனையூர்ல இருக்கற தமிழக வெற்றிக் கழகத்தோட அலுவலகத்துல, புதுசா நியமிச்சுருக்கற மாவட்ட பொறுப்பாளர்கள தனித்தனியா விஜய் சந்திச்சு பேசியிருக்கார். அதுக்கு அப்புறம் பட்டியல வெளியிட்ட விஜய், பிறகு எல்லா நிர்வாகிகள் மத்தியிலயும் பேசியிருக்கார். அப்போ, கட்சியோட நிர்வாக பொறுப்புகள வழங்குறதுல எந்த சமரசமும் செய்யக் கூடாதுன்னும், கட்சிக்காக உழைச்சு, கட்சிக்கு வலு சேர்க்கற தொண்டர்களுக்கு நிர்வாக பதவிகள வழங்கணும்னும் அறிவுறுத்தியிருக்கார்.
அதோட, மாவட்ட செயலாளர்கள் தப்பு பண்றதா புகார்கள் வந்தா, அவங்க மேல நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை தயங்காதுன்னும் எச்சரிச்சதா சொல்லப்படுது.
”உங்களுக்காகவே கட்சி தொடங்கினேன்..2026-ல் வெற்றி நிச்சயம்”
கட்சி நிர்வாகிகள் கிட்ட தொடர்ந்து பேசுன விஜய், மக்கள் இயக்கமா இருந்தப்போ நல்லா பணியாற்றுனதா நிர்வாகிகள பாராட்டியிருக்கார். அதோட, கட்சிப பணிகள்லயும் தீவிரமா ஈடுபடணும்னும், உங்கள நம்பிதான் கட்சி தொடங்கியிருக்கேன்னும் நிர்வாகிகள் கிட்ட சொல்லியிருக்கார். மேலும், மக்களுக்காகவே தமிழக வெற்றிக் கழகம்னு சொன்ன விஜய், மக்களுக்காக நீங்க செயல்படணும்னு அறிவுறுத்தியிருக்கார்.
2026 சட்டமன்ற தேர்தல்ல தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெற்றி பெறும்னு சொன்ன விஜய், நிர்வாகிகள் கட்சிக்காக உண்மையாவும், நேர்மையாவும் உழைக்கணும்னு சொன்னதா தகவல் வெளியாகியிருக்கு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

