மேலும் அறிய

AICTE Scholarship: ரூ.2 லட்சம்; 5200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிப்பது எப்படி?

YASHASVI Scholarship: பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் முக்கியமான துறைகளை மாணவர்கள் எடுத்துப் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித்தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5200 பொறியியியல் மாணவர்களுக்கு யஷஸ்வி எனப்படும் இளம் சாதனையாளர்களுக்கான உதவித்தொகை ('Young Achievers Scholarship and Holistic Academic Skills Venture Initiative (YASHASVI) scheme 2025'.) வழங்கப்படும் என்றும் இதற்கு தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் முக்கியமான துறைகளை மாணவர்கள் எடுத்துப் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித்தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (AICTE YASHASVI Scheme Guidelines)

  • இந்த உதவித் தொகைக்கு முதலாமாண்டு பொறியியல் பட்டம் அல்லது பட்டய (டிப்ளமோ) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • எனினும் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும்.
  • அதேபோல லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாமாண்டு நேரடியாகச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • பொறியியல் பிரிவில் கோர் (Core) துறைகளுக்கு மட்டுமே உதவித்தொகை அளிக்கப்படும். பிற பிரிவு பொறியியல் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
  • ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது. மாநில அரசால் வழங்கப்பட்ட செல்லக்கூடிய வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும்போது படிக்கும் கல்வி நிறுவனத்தின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

யாருக்கெல்லாம் உதவித் தொகை?

இந்த உதவித்தொகை 5200 பேருக்கு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, 2593 பொறியியல் பட்ட மாணவர்களுக்கும் 2607 டிப்ளமோ மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

எவ்வளவு?

பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேபோல டிப்ளமோ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் உதவித்தொகை அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

yashasvi@aicte-india.org என்ற இணைய முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பிப்ரவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆண்டுதோறும் வங்கிக் கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும்.  

https://yashasvi.aicte.gov.in/uploads/AICTE%20YASHASVI%20Scheme%20Guidelines.pdf என்ற இணைய முகவரியில் யஷஸ்வி உதவித்தொகை குறித்த முழு விவரங்களும் உள்ளன.

தமிழ்நாடு மாணவர்களைப் பொறுத்தவரை 430 டிகிரி மாணவர்களும்  353 டிப்ளமோ மாணவர்களும் இந்த உதவித்தொகைக்குத் தகுதி ஆனவர்கள்.

 yashasvi@aicte-india.org என்ற இணைப்பில் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

https://yashasvi.aicte.gov.in/login.php?r=session_invalid என்ற இணைப்பின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரபரக்கும் ஈரோடு இடைத்தேர்தல்! வெற்றி யாருக்கு? தொடங்கியது வாக்குப்பதிவு
பரபரக்கும் ஈரோடு இடைத்தேர்தல்! வெற்றி யாருக்கு? தொடங்கியது வாக்குப்பதிவு
தொடங்கியது சட்டப்பேரவைத் தேர்தல்: டெல்லியை ஆளப்போவது யார்? விறுவிறு வாக்குப்பதிவு
தொடங்கியது சட்டப்பேரவைத் தேர்தல்: டெல்லியை ஆளப்போவது யார்? விறுவிறு வாக்குப்பதிவு
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி! – காலையிலேயே சோக சம்பவம்
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி! – காலையிலேயே சோக சம்பவம்
Thiruparankundram: மாமன், மச்சானாக ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம் - திருப்பரங்குன்றம் மக்கள் பேட்டி!
Thiruparankundram: மாமன், மச்சானாக ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம் - திருப்பரங்குன்றம் மக்கள் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்‌ஷன்Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடிChennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...Modi visit US: வரியை உயர்த்திய ட்ரம்ப்! அலறும் உலக நாடுகள்! அமெரிக்கா புறப்படும் மோடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரபரக்கும் ஈரோடு இடைத்தேர்தல்! வெற்றி யாருக்கு? தொடங்கியது வாக்குப்பதிவு
பரபரக்கும் ஈரோடு இடைத்தேர்தல்! வெற்றி யாருக்கு? தொடங்கியது வாக்குப்பதிவு
தொடங்கியது சட்டப்பேரவைத் தேர்தல்: டெல்லியை ஆளப்போவது யார்? விறுவிறு வாக்குப்பதிவு
தொடங்கியது சட்டப்பேரவைத் தேர்தல்: டெல்லியை ஆளப்போவது யார்? விறுவிறு வாக்குப்பதிவு
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி! – காலையிலேயே சோக சம்பவம்
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி! – காலையிலேயே சோக சம்பவம்
Thiruparankundram: மாமன், மச்சானாக ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம் - திருப்பரங்குன்றம் மக்கள் பேட்டி!
Thiruparankundram: மாமன், மச்சானாக ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம் - திருப்பரங்குன்றம் மக்கள் பேட்டி!
Today Power Shutdown: தமிழகத்தில் இன்று ( 05.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Today Power Shutdown: தமிழகத்தில் இன்று ( 05.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சென்னையில் அரங்கேறிய கொடூரம்!
ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சென்னையில் அரங்கேறிய கொடூரம்!
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – காவல்துறைக்கு செம டோஸ் விட்ட சென்னை உயர்நீதிமன்றம்  
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – காவல்துறைக்கு செம டோஸ் விட்ட சென்னை உயர்நீதிமன்றம்  
US Deports Indians: இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
Embed widget