மேலும் அறிய
Tamilandu Roundup: மலிவு விலை முதல்வர் மருந்தகங்கள், கஞ்சா பயிரிட்ட கல்லூரி மாணவர்கள் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup : தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

தமிழ்நாடு செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: 90% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கும் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் - அதிமுகவினர் உற்சாகம்
- கோவை குனியமுத்தூர் பகுதியில் அறையில் கஞ்சா பயிரிட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
- விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மீது நாகர்கோவில் - மும்பை ரயில் மோதிய விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் கைது
- "பிரதமர் மோடி பேசுவது நேரடியாக புரிந்துவிடும் என்பதால் தமிழ்நாட்டு மக்கள் ஹிந்தி கற்பதை திமுக எதிர்க்கிறது” - பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்
- பாமகவின் அடுத்த மாநாடு மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி நடைபெறும் - கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி பேச்சு
- திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலின் எஞ்சின் தடம் புரண்டது தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி ஜல்லிக் கற்கள் இடையே சிறிது தூரம் ஓடி நின்றது
- மதுபோதையில் புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கியும், பேருந்தின் கண்ணாடியை உடைத்தும் ரகளை கைது செய்ய வந்த போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சல் - தூத்துக்குடியைச் சேர்ந்த நால்வரும் கைது
- இந்தி திணிப்புக்கு எதிராக சங்கரன்கோவில் ரயில் நிலைய பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர்
- கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் அருகே உள்ள மரண பாறையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற இளைஞர் அலையில் சிக்கி மாயம்
- இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் - நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பால் 10,000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிப்பு
- 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய எல்.இ.டி. பல்ப் அகற்றம் - அறுவை சிகிச்சையின்றி அகற்றிய நெல்லை அரசு மருத்துவர்களுக்கு பலரும் பாராட்டு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஆட்டோ
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion