மேலும் அறிய
Advertisement
ASP Promotion: தமிழ்நாட்டில் 16 டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு - யார்? யாருக்கு? முழு விவரம்
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய 16 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவின்படி,
- தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய டி.எஸ்.பி. சிவனுபாண்டியன், பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் தலைமை அலுவலக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை, ரயில்வே, சென்ட்ரல் டி.எஸ்.பி. முத்துக்குமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று தாம்பரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர், சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் மணிகண்டன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கடலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பி. பதவி உயர்வு பெற்று விருதுநகர் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தென்காசி லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. மதியழகன் பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராமநாதபுரம், பரமக்குடி துணை சரக டி.எஸ்.பி. காந்தி பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை நகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் உதவி ஆணையர் ரமேஷ் பதவி உயர்வு பெற்று தென்காசி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகர வடக்கு சரகம் போக்குவரத்து விசாரணை பிரிவு உதவி ஆணையர் விஸ்வநாத் ஜெயன் பதவி உயர்வு பெற்று சென்னை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தென்காசி ஆலங்குளம் சரக டி.எஸ்.பி. சகாய ஜோஸ் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி பேரூராரணி காவல் பயிற்சி பள்ளி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட குற்ற தரவுகள் பிரிவு டி.எஸ்.பி. பிரேமானந்தன் பதவி உயர்வு பெற்று கரூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகர அண்ணாநகர் சரக உதவி ஆணையர் ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று கடலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகர கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் தீந்தமிழ் வளவன் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை, க்யூ பிரான்ச் சி.ஐ.டி. பிரிவு டி.எஸ்.பி. கவுதம் பதவி உயர்வு பெற்று வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை, ஓ.சி.ஐ.யு. டி.எஸ்.பி. சிவராஜன் பதவி உயர்வு பெற்று சென்னை, சி.ஐ.டி. சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோயம்புத்தூர், டான்ஜெட்கோ டி.எஸ்.பி. விஜயராகவன் பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்ட அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாமக்கல் குற்ற தரவு பிரிவு டி.எஸ்.பி. கொடிலிங்கம் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion