Bike Taxi: போச்சா..! பைக் டாக்ஸிகளுக்கு ஆப்பு, தமிழக அரசு அதிரடி உத்தரவு - இனி கூடுதல் செலவு தான்..!
Bike Taxi: பைக் டாக்ஸிகள் தொடர்பாக வாகன சோதனை நடத்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Bike Taxi: வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ன்று முதல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பைக் டாக்ஸிகளுக்கு சிக்கல்?
விதிகளை மீறி இயக்கப்படும் வணிக இருசக்கர வாகனங்களை கண்டறிய சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மோட்டார் வாகன விதிகளை மீறி, இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி, பொதுமக்கள் அதிகபட்சம் இரண்டு பேர் இருசக்கர வாகனக்களில் பயணிக்கலாம். ஆனால், விதிகளை மீறி இருசக்கர வாகனங்கள் பைக் டாக்சிகளாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறியது உறுதியானால் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் செலவு:
மெட்ரோ ரயில் சேவை இல்லாத பகுதிகள், குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோர், விரைந்து ஒரு இடத்தை அடைய நினைப்போரின் முதல் விருப்பமாக பைக் டாக்ஸிகள் உள்ளன. காரணம் குறைந்த கட்டணம் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆனால், ஆட்டோ மற்றும் கார்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்னைகளுக்குமான வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக பொதுமக்கள் பைக் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் பைக் டாக்ஸி சேவை பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பைக் டாக்ஸியை விரும்புவோர், இனி கூடுதல் செலவு செய்து மற்ற போக்குவரத்து வாய்ப்புகளுக்கு மாற வேண்டி இருக்கும். தமிழ்நாட்டில் ராபிடோ மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள், பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன.