TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்- ஆசிரியர் தேர்வு வாரியம்.

மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. எனினும், செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே போட்டித் தேர்வை எழுத முடியும் என்று டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள சட்டப் பட்டதாரிகள் அல்லது சட்டக் கல்லூரி மாணவர்கள், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியான அறிவிக்கையின்படி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதே நேரத்தில் TNSET 2024 அதாவது மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்காக செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்''
இவ்வாறு டிஆர்பி தெரிவித்துள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் நேரடி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த டிஆர்பி அறிவிப்பை https://www.trb.tn.gov.in/admin/pdf/3392532274Law%20Addendum%2021.02.2025.pdf என்ற இணைப்பில் காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: Law Recruitment: அரசுக் கல்லூரிகளில் 132 உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு: ஜன.31 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
சட்ட உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
- சரியான இ- மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவை விண்ணப்பிக்க முக்கியம்.
- இணைப் பேராசிரியர் பதவிக்கு 2 பாடங்களுக்கு 2 படிவங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவான விவரங்களை https://trb.tn.gov.in/admin/pdf/756485331TRB%20-%20Final%20Notification-%2024-1-2025.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அறியலாம்.

