மேலும் அறிய
Advertisement
"இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு" தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கமான பதிவு!
சிகாகோவில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.
சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.
"தமிழினம் மேலெழுந்த வரலாறு"
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, நிகழ்ச்சி குறித்து தனது அனுபவங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன்.
கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி - அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன்" என பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு!
— M.K.Stalin (@mkstalin) September 8, 2024
சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின்… pic.twitter.com/BEueaNpXGN
தமிழக முதல்வரின் அமெரிக்க பயணம்:
தொழில் முதலிடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 2 வாரங்களுக்கும் மேலான இந்த பயணத்தில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, ஏராளமான தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
அதன் மூலம், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான பல் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி வருகின்றன. இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு அங்கமாக தான், தமிழ் வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றியுள்ளார். இதில் ஏராளமான அமெரிக்க வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion