இந்தி, சமஸ்கிருதம், நீட் - எதிர்ப்பு; கரூரில் திராவிட கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட திராவிட கழகம் சார்பாக இந்தி, சமஸ்கிருதம், நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்ட திராவிட கழகம் இளைஞர் அணி சார்பாக திராவிடர் மாணவர் கழகம் நடத்தும் சமஸ்கிருதம், நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கரூர் மாவட்ட திராவிட கழகம் இளைஞர் அணி சார்பாக திராவிடர் மாணவர் கழகம் நடத்தும் சமஸ்கிருதம், நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெகநாதன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க கோரி கண்டன கோசம் எழுப்பப்பட்டது.
நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற இன்று பல்வேறு கோசம் எழுதப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் ராஜசேகரன், கரூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி. அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்