கழிவறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவி..! சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ..!
பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் அவர் பயிலும் பள்ளியின் கழிவறையை, பள்ளி சீருடையுடன், பள்ளி மாணவி ஒருவர் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைகளில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வந்த காட்சி எந்தப் பள்ளி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆனம்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவ சொன்னார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் என்பது தெரியவில்லை. அந்த மாணவி கழிப்பறையை கழுவும் காட்சிகளை யாரோ ஒருவர் ஒளிப்பதிவு செய்வது தெரிய வருகிறது அந்த நபர் யார் என்பது குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த காட்சி ஆனம்பாக்கம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை ,இதனை விசாரணை மேற்கொண்டு இதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தாள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. pic.twitter.com/pC9VDTJWZA
— Kishore Ravi (@Kishoreamutha) March 29, 2022
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவதி தொடர்புகொண்டு கேட்கும்போது, பள்ளியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள். தினதோறும் அவர்கள் மூலம் பள்ளி வளாகம் கழிவறை அனைத்துமே தூய்மைபடுத்தப்படுகிறது. இந்நிலையில் மாணவியை எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார். உள்நோக்கத்தோடு யாரோ ஒருவர், இந்த விஷயத்தை கையாண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்றார் .
தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வீடியோவை எடுத்தது யார் ஏன் எடுக்கப்பட்டது மாணவியை யாராவது கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்தினார்கள் என்பது குறித்த தகவல்கள் உரிய விசாரணைக்கு பிறகே வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்