Ennore Gas Leak: எண்ணூரில் வாயுக்கசிவு - கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் உள்ள குழாயில் ஏற்பட்ட கோளாறினால் அமோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது.
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் உள்ள குழாயில் ஏற்பட்ட கோளாறினால் அமோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இதனால் எண்ணூர் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழாயில் ஏற்பட்ட கசிவினை சரிசெய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்படு வருகின்றனர். மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் போலீசார் கோரமண்டல் தொழிற்சாலைக்கு முன்பு குவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறபித்துள்ளது.
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி இரவு 12 மணி அளவில் அமோனிய கசிவால் தொழிற்ச்சாலை அருகில் உள்ள மீனவர்கள் வசிக்கும் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாயு கசிவிற்கு பயந்து நடந்தே சென்று உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு சிலர் திருமண மண்டபங்கள் சாலைகளில் ஓரம் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளனர்.
கண் எரிச்சல் காரணமாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வீட்டில் இருந்த குடும்பத்துடன் வெளியேறிய மக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தலைவலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் பயத்தில் கூட்டம் கூட்டமாக நடந்தே வெளியேறினர்.
#WATCH | Tiruvallur, Tamil Nadu: People hold protest after Ammonia gas leak was detected in a sub-sea pipe in Ennore.
— ANI (@ANI) December 27, 2023
According to DIG, Joint Commissioner Avadi, Vijayakumar, there are no more gas (ammonia) leaks at Ennore. People are back home. Medical and police teams are… pic.twitter.com/APYymkgY6X
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வந்து தொழிற்சாலை நிர்வாகிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், எண்ணூர் திருவொற்றியூர் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வடக்கு வட்டார துணை ஆணையர் ரவி தேஜோகட்டா, மற்றும் இணை ஆணையர் விஜயக்குமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிப்பு குறித்து இன்று தெரியவரும் என்றும் தொழிற்சாலையில் இருந்து கடல் வழியாக வெளியே செல்லும் குழாய் உடைந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும், சுமார் மூன்று மணி நேரம் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதாககவும் இது படிபடியாக குறைந்து விடும் என்று தெரிவித்தனர்.
வாயு கசிவினால் பாதிப்படையாத பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகினர். இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கசிவானது சுமார் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாக காவல்துறை சார்பாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின்போது சி.பி.சி.எல் கச்சா எண்ணெய் கழிவுகளை வெளியேற்றியதால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே எண்ணூர் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அமோனியா கசிவால் அவதிக்குள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.