மேலும் அறிய

Marakkanam To Puducherry: 20 நிமிஷம் தான் - மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை - ரூ.2,157 கோடி, சென்னை டூ நாகை இனி ஈசி

Marakkanam To Puducherry 4 Lane: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரையில், 4 வழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Marakkanam To Puducherry 4 Lane: மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரையிலான 4 வழிச்சாலை அமைக்க 2 ஆயிரத்து 157 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மரக்காணம் டூ புதுச்சேரி 4 வழிச்சாலை:

பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான குழு வெள்ளிக்கிழமை கூடியது. அதன் முடிவில்,  கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியில் இருந்து புதுச்சேரி வரையிலான, 4 வழிசாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையானது போக்குவரத்தை கட்டுப்படுத்த 34.7 கி.மீ நீளமுள்ள பசுமைப் பாதை, அணுகல் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி புறவழிச்சாலையைக் கொண்டிருக்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை காரணமாக சாலையை விரிவாக்கம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்படும் சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

ரூ.2,157 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை - புதுச்சேரி - நாகப்பட்டினர் - கன்னியாகுமரி பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக, இந்த மரக்காணம் - புதுச்சேரி நான்கு வழி சாலை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான செலவாக 2 ஆயிரத்து 157 கோடி ரூபாய் கணிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தலுக்கு 442 கோடி ரூபாய் செலவாகும் என்றும், மொத்த சிவில் செலவு ஆயிரத்து 118 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என்றும் அரசு தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.  திட்டம் முடிவடையும்போது நாள் ஒன்றிற்கு 17 ஆயிரத்து 800 பயணிகள் காரை இந்த சாலை கையாளும் என கூறப்படுகிறது. வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கான திறமையான இணைப்பாகவும் இந்த சாலை மாற உள்ளது.

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்:

தற்போதுள்ள கட்டுமான வசதிகளின்படி, சென்னை, புதுச்சேரி, விழுப்புரம்,  மற்றும் நாகப்பட்டினம் இடையேயான இணைப்பானது, இருவழி அகல தேசிய நெடுஞ்சாலை 332A மற்றும் மாநில நெடுஞ்சாலைகளையே சார்ந்துள்ளது. அதிகப்படியான போக்குவரத்து காரணமாக இந்த சாலைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வழித்தடத்தில் உள்ள அதிக மக்கள் உள்ள பகுதிகள் மற்றும் நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

தீர்வாகும் புதிய 4 வழிச்சாலை:

மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலை ஆனது, நான்கு பிரதான சாலைகளை ஒருங்கிணைக்கிறது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை 32 மற்றும் 332 உடன், மாநில நெடுஞ்சாலைகளான 136 மற்றும் 203 ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதுபோக புதுச்சேரி மற்றும் சின்னபாபு சமுத்திரம் ஆக்கிய ரயில் நிலையங்களையும், சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் கடலூரில் உள்ள ஒரு சிறிய துறைமுகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முன்மாதிரி சாலை திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக புதிய 4 வழிச்சாலை மூலம் மரக்காணம் தொடங்கி புதுச்சேரி வரையிலான, கிழக்கு கடற்கரை சாலையின் 46 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் பலன்கள் என்னென்ன?

மேம்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலையானது பிரதான ஆன்மீக தளங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தி, பிராந்திய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதோடு, வணிகம், தொழில்துறை மற்றும் மீன் வர்த்தகத்தையும் பெருக்கக் கூடும். குறிப்பாக மன்னகுள கோயில் மற்றும் பாரடைஸ் கடற்கரைக்கான அணுகலை எளிதாக்கும்,. திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளது.

நீண்ட காத்திருப்புக்கு முடிவு:

கிழக்கு கடற்கரையை சாலையை விரிவாக்கும் செய்யும் பணிகளானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாமல்லபுரம் முதல் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ஆழியூர் கிராமம் வரையிலான பகுதியில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. 46 கிலோமீட்டர் தூரம் கொண்ட மரக்காணம் - ஆழியூர் இடையேயான பணிகளானது வனப்பகுதியில் உள்ள நிலத்தை கையகப்படுத்துவது போன்ற பிரச்னைகளால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு ஒரு வழியாக பணிகளை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதேநேரம், சென்னை தொடங்கி குமரி வரையிலான பொருளாதார வழித்தடத்தின் பணிகளும் முழு வேகம் எடுத்துள்ளன. குறிப்பாக மாமல்லபுரம் தாண்டி புதுச்சேரி தொடங்கி நாகை வரையிலான பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த 46 கிலோ மீட்டர் வழித்தடமும் பயன்பாட்டிற்கு வந்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட விலங்கு நல ஆர்வலர் வெட்டிக்கொலை.. திருவொற்றியூரில் பயங்கரம்!
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட விலங்கு நல ஆர்வலர் வெட்டிக்கொலை.. திருவொற்றியூரில் பயங்கரம்!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
போலீசார் கண் முன்னே ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு! விசிக நிர்வாகி கைது; மகனுக்கு வலைவீச்சு!
போலீசார் கண் முன்னே ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு! விசிக நிர்வாகி கைது; மகனுக்கு வலைவீச்சு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Car Tips: ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
Embed widget