மேலும் அறிய

’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 28.78 கோடி சொத்து சேர்த்தாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான 2011 முதல் 2016ம் ஆண்டு மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.சி.வீரமணி. கடந்த 10 ஆண்டு காலமாக அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது எழுந்த புகாரை அடுத்து இன்று காலை 6.30 மணி முதல் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர், அரக்கோணம், பெங்களூர் என்று 28 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், 2016-21 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்தாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் ரூபாய் 28.78 கோடிக்கு சொத்துக்களை அதிகமாக சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

கே.சி.வீரமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் பெயரிலும், அவரது தாயார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளார் என்றும் அந்த FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம், தனி நபர்கள் சார்பில் கே.சி.வீரமணி மீது இந்த சொத்துக்குவிப்பு புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீத அளவு சொத்துக்களை குவித்துள்ளார் என்பது இந்த முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

வேலூர் மாவட்டத்தில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான பாலாறு என்ற விவசாய கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கல்லூரியில் முக்கிய ஆவணங்கள் உள்ள அறைகளில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்களது சோதனையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, கே.சி.வீரமணிக்கு மிகவும் நெருக்கமான வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள கர்னல் என்பவரது வீடு மற்றும் அவரது நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கே.சி.வீரமணிக்கு நெருக்கமான மற்றொரு நபராகிய ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

’முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?’ - முழு விவரம்..!

மேலும், இன்று அதிகாலை முதலே ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணிக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம் மற்றும் ஏலகிரியில் உள்ள சொகுசு ஹோட்டலிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை வேலூர் மற்றும் திருப்பத்தூரில் ரொக்கமாக எதுவும் கைப்பற்றப்படாவிட்டாலும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் சென்னையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget