மேலும் அறிய

Tamizhaga Vetri kazhagam: தொடங்கிய சர்ச்சை: தமிழ்நாடு இல்லையா… தமிழக வெற்றி கழகம் ஏன்?

Tamizhaga Vetri kazhagam: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்துள்ளார். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri Kazhagam) என்ற பெயரில் புதிய கட்சியை இன்று (பிப்.2) தொடங்கி உள்ளார். இந்தப் பெயர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்றிருக்கும் நிலையில், தமிழகம் என்ற பெயரை அவரைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. 

நடிகர் விஜய் 2009-ல் இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது தொடங்கி, நீட் தேர்வால் அனிதா மரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்கு கருத்துத் தெரிவித்து வந்தார். தொடர்ந்து, தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றி அரசியல் பயணத்துக்கான அச்சாரத்தை இட்டார். 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்கினார். 

நடைபெற்ற முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைப் போட்டியிட அனுமதி அளித்தார். 

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மக்கள் பணி செய்ய நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரண உதவிகள் வழங்கினார். மாணவர்களின் படிப்புக்கு உதவுவது, நூலக வசதிகள், உணவகம் ஆகியவற்றையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கி நடத்தி வருகிறார். தொடர்ந்து கனிமொழி, சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
 
விமர்சனத்திற்கு உள்ளான கட்சி பெயர்:
 
இந்த நிலையில் இன்று (பிப்.2) 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சியை அறிவித்துள்ளார். இதுகுறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில், தமிழகம் என்று பெயர் சூட்டப்பட்டது ஏன் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் கூறும்போது, சங்க இலக்கியங்களில் இருந்து ஆதாரம் எடுத்து இந்த மண்ணிற்கு தமிழ்நாடு என்பதே பெயர் என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ்"நாடு" என்ற சொல் வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பதற்காகவே ராஜாஜி மற்றும் அவரது அரசியல் வாரிசுகள் பயன்படுத்தத் தொடங்கிய தமிழகம்' என்னும் வார்த்தையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்து அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய் என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த 2023ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமிழ்நாடு தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  தொடர்ந்து 2023ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார். அதோடு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழிலும், தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றது. மேலும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை. ஆளுநரின் இந்த அடுத்தடுத்த செயல்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, தமிழ்நாடு அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசும் திமுகவினரும் கடும் விமர்சனத்தைப் பதிவு செய்தனர். 

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ’கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை பாஜக தொடர்ந்து முன்வைத்த நிலையில், மற்றொரு கழகம் உதயம் ஆகியுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget