மேலும் அறிய

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார். கருணாநிதி-பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க. முத்து. 77 வயதான அவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க. முத்து உடலுக்கு ஆஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், திமுகவில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அதில், பிள்ளையோ பிள்ளை திரைப்படம், அவரது தந்தை கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான படமாகும். தனது கலை வாரிசாக மு.க. முத்துவை முன்னிறுத்த கருணாநிதி முயற்சி மேற்கொண்டதன் விளைவாகவே, மு.க. முத்து அரசியல் பக்கம் வராமல், திரையுலகின் பக்கம் திரும்பினார்.

ஆனால், திரையுலகிலும் பெரிய அளவில் அவர் சோபிக்க முடியாமல் போனது. எம்ஜிஆருக்கு போட்டியாகவே அவர் உருவாக்கப்பட்டுவருவதாக அந்நாளில் கூறப்பட்டது. ஆனால், அது நடக்காமல் போகவே, சில படங்களில் நடித்த மு.க. முத்து, அதன் பின் திரையுலகிலிருந்து விலகி இருந்தார். அரசியலிலும் ஈடுபாடு இல்லாததால் மொத்தமாக ஒதுங்கிக் கொண்டார்.

மு.க. முத்துவிற்கு அறிவுநிதி என்ற மகன் உள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த மு.க. முத்து, வயது மூப்பு காரணமாக, கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. முத்துவின் மறைவிற்கு, அரசியல் பிரமுகர்களும், பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget