மேலும் அறிய

பதவி கொடுத்து சில மணிநேரங்களில் ராஜினாமா! அதிருப்தியை வெளியிட்ட குலாம் நபி ஆசாத்!

தேசிய அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக வளர்ந்திருந்த அவரை மீண்டும் மாநில அரசியலில் இறக்கியது பிடிக்காததால் ராஜினாமா செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குலாம் நபி ஆசாத் ராஜினாமா

காங்கிரஸின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி, ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினராகவும் பதவி வகித்தார். அவர் மாநில தலைவர் பதவி மட்டுமின்றி, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும், ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை வந்துள்ள தகவலின்படி, இந்த மாநில தலைவர் நியமனம் தனது மதிப்பிற்கும் அனுபவத்திற்கும் குறைவானதாக கருதிய காரணத்தால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. 

பதவி கொடுத்து சில மணிநேரங்களில் ராஜினாமா! அதிருப்தியை வெளியிட்ட குலாம் நபி ஆசாத்!

மீண்டும் மாநில அரசியல்

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து தேசிய அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக வளர்ந்திருந்த அவரை மீண்டும் மாநில அரசியலில் இறக்கியது பிடிக்காததால் ராஜினாமா செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்: சூரியனுக்கும் வயதாகும்.. இறந்துபோகும்?! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஷாக் தகவல்கள்!

நீண்டகால அதிருப்தி

காங்கிரஸின் தலைமை தொடர்பான பிரச்சனைகளின் மீது நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வந்தார் குலாம் நபி ஆசாத். இதனை வெளிப்படையாகவும் பல முறை அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் வேண்டுமென, சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிருப்தியின் நீட்சியாகவே இந்த ராஜினாமாவை பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதவி கொடுத்து சில மணிநேரங்களில் ராஜினாமா! அதிருப்தியை வெளியிட்ட குலாம் நபி ஆசாத்!

தேர்தல் நடக்குமா?

இவர் மட்டுமின்றி, இவருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படும். எவ்வாறாயினும், குளிர்காலம் தொடங்கும் முன் எல்லை நிர்ணயம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முடிக்க முடியாததால், இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை உள்ளது. தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் சமீபத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிடும் தேதியை நவம்பர் 25-ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது. இதுவே யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு வெளியிடப்படும் முதல் வாக்காளர் பட்டியல் ஆக இருக்கும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
John Spencer on Operation Sindoor: நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சீனுக்கு வந்த EPS! சீமானின் பக்கா ஸ்கெட்ச்! அதிமுக- நாதக கூட்டணி?செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு! டிக் அடித்த ஸ்டாலின்! திமுகவின் கொங்கு கணக்குஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucement

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin's Plan for Senthil Balaji: செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு - ஒர்க்அவுட் ஆகுமா தேர்தல் ஸ்கெட்ச்.?
John Spencer on Operation Sindoor: நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
நவீன யுகத்தின் தீர்க்கமான வெற்றி ‘ஆபரேஷன் சிந்தூர்‘ - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி புகழாரம்
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
TN 10th Result 2025: முன்கூட்டியே 10ஆம் வகுப்புத் தேர்வு தேர்வு முடிவுகள்! மே 16-ல் வெளியீடு- 11ஆம் வகுப்புக்கு எப்படி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS..  சீமானின் பக்கா ஸ்கெட்ச்.  அதிமுக- நாதக கூட்டணி?
ADMK NTK Alliance: சீனுக்கு வந்த EPS.. சீமானின் பக்கா ஸ்கெட்ச். அதிமுக- நாதக கூட்டணி?
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
Embed widget