’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucement
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவை தொடர்ந்து, தற்போது விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், கோலியின் முடிவை கேட்டு அதிர்ந்த பிசிசிஐ, கோலியிடம் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்போது 36 வயதாகும் கோலி, இன்னும் 2 ஆண்டுகளாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், ஏற்கனவே டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனை கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





















