சூரியனுக்கும் வயதாகும்.. இறந்துபோகும்?! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஷாக் தகவல்கள்!
மனிதனுக்கு வயதாகும், விலங்குகள், பறவைகள் என எல்லா உயிர்களும் தோன்றி மறையும். வானத்து நட்சத்திரங்களும், கோள்களும் என்னவாகும் என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா?!
உலகிற்கே ஒளி தந்து, உலகையே இயங்க வைத்துக் கொண்டிருக்கும் சூரியனுக்கு வயதாகுமா என்று யோசித்துப் பார்த்திருப்போமா?
ஆனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூற்றின்படி சூரியனுக்கும் வயதாகுமாம் சூரியனும் ஒருநாள் இறந்துபோகுமாம். ஆச்சரியமாக இருக்கிறதா! ஆனால் அதுதான் உண்மை. அப்படி சூரியன் இறக்கும் முன்னர் அது பூமியை மட்டுமல்ல மற்ற கோள்களையும் கூட கபளீகரம் செய்துவிடுமாம். உடனே வியர்த்துப்போய் அஞ்சாதீர்கள். அது நடக்க காலம் இருக்கிறது. பில்லியன் ஆண்டுகள் ஆகும். அப்போது நாம் இருக்க மாட்டோம்.
சூரியனுக்கு எப்படி வயதாகும்?
சூரியனுக்கு இப்போது நடுத்தர வயதாகிறதாம். சூரியனுக்கு வயதாக ஆக அது வெப்பமாகிக் கொண்டே இருக்குமாம். அப்படி வெப்பமாக ஆக அதில் உள்ள ஹைட்ரஜன் தீர்ந்து போகுமாம். அப்போது அதன் மையப்பகுதி சுருங்கிவிடும். அவ்வாறு மையம் சுருங்கும்போது சூரியனின் வெளிப்புறம் விரிவடையும். அது விரிவடைந்தால் பூமியையும், ஏன் செவ்வாயையும் சேர்த்து விழுங்கிவிடும். சூரியன் ஒரு நெருப்பு பூதம் போல் ஆகிவிடும். அதன் மேற்புற வெப்பம் குறையும். சூரியனின் மையப் பகுதியில் ஹைட்ரஜ்ன, ஹீலியம் முற்றிலுமாக தீர்ந்து போகும். இதனால் சூரியனின் வெளிப்புறம் நெபுலாவாகவும் உள்புறம் ஒளியிழந்த வைட் ட்வார்ஃப் ஆகும்.
இதை இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் இப்போது நமது சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கள் அனைத்தும் ஹீலியம் அணுக்களாக உருவாகிக் கொண்டுள்ளது. இன்னும் 5 மில்லியன் ஆண்டுகள் கழித்து ஹைட்ரஜன் தீர்ந்து முழுமையாக தீர்ந்து ஹீலியம் அணுகள் மட்டும் இருக்கும். அடுத்து இந்த ஹீலியம் அணுக்கள் ஒன்று சேர்ந்து ஃப்யூஸ் ஆனபிறகு கார்பன் அணுக்கள் உருவாகும். சூரியனின் மையப் பகுதி முழுவதும் கார்பன் அணுக்கள் நிரம்பி இருக்கும்.
இதற்கு அப்பறம் தான் நமது சூரியனில் கார்பன் அணுக்கள் ஃப்யூஸ் ஆக தொடங்கும். அப்போது நமது சூரியனில் அணு சேர்க்கை நடக்கும். இதனால் சூரியனின் வெளிப்புறம் நெபுலாவாகவும் உள்புறம் ஒளியிழந்த வைட் ட்வார்ஃப் ஆகும்.
சூரியனின் முக்கிய அம்சமே உஷ்ணம்தான். சூரியனுக்கு இறப்பு வரும்போது பூமியின் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உறையத் தொடங்கும். பூமியின் மேற்பரப்பில் முதல் ஒரு வாரத்திலேயே ஜீரோ டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்றுவிடும்.
ஒரு வருடத்தில் மைனஸ் நூறு டிகிரி செல்சியஸுக்குச் சென்று விடும். ஆனால், பூமியின் உட்கருவில் உள்ள உஷ்ணம் காரணமாக சில மில்லியன் வருடங்களுக்கு மைனஸ் இருநூற்று நாற்பது டிகிரி செல்சியஸிலேயே நிலை கொண்டிருக்கும்.
கடும் குளிர் காரணமாக வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களும் உறைந்து திடமாகி பூமியில் விழக்கூடும்.
ஒளி இருந்தால்தானே ஒளிச்சேர்க்கை (photosynhesis) நடைபெறும்? ஒளிச்சேர்க்கை நடைபெற்றால்தான் தாவரங்கள் உயிர்வாழ முடியும். பூமியில் உள்ள 90 சதவிகித தாவரங்கள் சில மணித்துளிகளில் இறந்துவிடும்.
அண்டத்திலுள்ள காஸ்மிக் கதிர்கள் நேரடியாக வந்து பூமியைத் தாக்கும். எனவே, மனிதர்களுக்கும் பிற விலங்குகளும் உயிரிழக்க நேரிடும்.
பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்த அடிப்படை ஆதாரங்களும் இருக்காது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்