மேலும் அறிய
Advertisement
Veeramani on AIADMK: அதிமுகவிற்கா இந்த நிலை?; கண்முன்னாலேயே இப்படி நடக்குது: கி.வீரமணி வேதனை!
”அ.தி.மு.க., தங்களது அடமானத்தை மீட்டு தமிழ்மானம் காக்க வேண்டும், மிகப்பெரிய இயக்கமான அ.தி.மு.க.,விற்கு கண்முன்னால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது என்றார்.” - கி.விரமணி !
மதுரை ஆதீனம் போன்றோர் ஆதீனமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து டெல்லியின் அடமான அதிமுகவாக மாறிவிட்டனர், மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு கண்முன்னால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிடர் கழகத்தினர் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி பங்கேற்றுகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி பேசியபோது..," பொதுக்குழு கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய்திட்டம் செயல்படுத்த வேண்டும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்தேர்வில் அதிக தோல்வி குறித்து ஆய்வு நடத்த வேண்டும், திராவிட மாடல் அரசை பற்றிய அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு, உயர்நீதிமன்ற பதவிகளில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தில் இணைந்தால் துணி துவைக்கலாம், முடி திருத்த போகலாம் என பா.ஜ.க.,வை சேர்ந்தவர்கள் கூறுவது இளைஞர்களின் கோபத்தை் தூண்டுகின்றனர். வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல அக்னிபாத்திற்கு எதிராக இளைஞர்கள் எந்த அரசியல் பின்புலமின்றி போராடிவருகின்றனர். மதுரை ஆதீனமாக போன்றோர் ஆதீனமாக உலவ காரணம் திராவிடம் தான். மதுரை ஆதீனம் போன்றோரின் செயல் வித்தைகளுக்கு பயன்படுத்தலாம், பட்டினபிரவேசம் என்னால் தெரியவந்தது போல சனாதானத்தில் ஆதீனம் என்றால் யார் என்பதையும் அனைவருக்கும் தெரியட்டும்.
பாஜக எதிர்கட்சிகளை ஒன்றிணையாமல் பிரித்தாளுகிறது, தமிழகத்தில் எதிர்கட்சியை வைத்து பொம்மலாட்டம் நடத்துகிறது. யார் வர வேண்டும் என்பதை யார் வரக்கூடாது என்பதை திட்டமிட்டு நடத்துகிறது பாஜக. 2024 தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றார்.
அ.தி.மு.க.,வினர் திராவிடர் கழகம் தாய் கழகம் என்பதையும் மறந்துவிட்டார்கள், அ.தி.மு.க.,வின் தாயாக இருந்த அம்மாவையும் மறந்துவிட்டார்கள். அ.தி.மு.க., தற்போது டெல்லியின் அடமான உள்ளது. லேடியா? மோடியா என கேட்ட அம்மாவின் கொள்கைக்கு எதிராக திசைமாறி செல்கின்றனர், அ.தி.மு.க.,வை யார் டெல்லியில் இருந்து மீட்கும் தலைமையோ அவர் வரட்டும், அ.தி.மு.கவின் பொதுக்குழுவால் புதுக்குழு தான் உருவாகிறது, அ.தி.மு.க., தங்களது அடமானத்தை மீட்டு தமிழ்மானம் காக்க வேண்டும், மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு கண்முன்னால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: மதுரை பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்; உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி - காரணம் என்ன..?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
விழுப்புரம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion