அரசு பேருந்தின் வீலில் சிக்கிய இளைஞர்கள்.. 50 மீ தூரத்திற்கு துடிதுடித்த உயிர்கள்.. தாங்க முடில
இளைஞர்கள் மீது பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழக (BMTC) பேருந்து மோதியுள்ளது. இதனால் பீதியடைந்த பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும், பயணிகளுடன் பேருந்தை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பெங்களூருவில் இரண்டு இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் மோதிய இளைஞர்கள், அதன் சக்கரத்தில் சிக்கியுள்ளனர். சக்கரத்தில் சிக்கியபடி, 50 மீட்டருக்கும் மேலாக அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
துடிதுடித்த இளைஞர்கள்:
கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் (மெஜஸ்டிக்) இருந்து காடுகோடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பழைய ஏர்போர்ட் சாலையில் முருகேஷ்பாளைய சிக்னல் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் இளைஞர்கள் மீது பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழக (BMTC) பேருந்து மோதியுள்ளது. இதனால் பீதியடைந்த பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும், பயணிகளுடன் பேருந்தை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பயங்கர விபத்து நடந்தது எப்படி?
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், விபத்து குறித்து விவரிக்கையில், "விபத்தில் சிக்கிய இருவரில் ஒருவர், முருகேஷ்பால்யா சிக்னலில் ஜிம்முக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து சாலையைக் கடக்க முயன்றார். மற்றொருவர், சிறிய இரு சக்கர வாகனத்தில் வந்த ரேபிடோ ஓட்டுநர். இருவரும் யூ டர்ன் எடுக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த பேருந்து அவர்கள் மீது மோதியது. அவர்கள் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் நசுக்கப்பட்டனர்" என்றார். விபத்தில் சிக்கிய இருவருக்கும் 20 வயது இருக்கும். அவர்கள், ஆம்புலன்சில் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜீவன் பீமா நகர் இன்ஸ்பெக்டர் நடராஜ், இதுகுறித்து பேசுகையில், "நான் அதே இடத்தில் என் ஷிப்டை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனது அதிகாரப்பூர்வ காரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். விபத்து பற்றி கேள்விப்பட்டு ஒரு ஆட்டோரிக்சாவில் அங்கு விரைந்தேன். நாங்கள் இன்னும் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். பேருந்து ஓட்டுநரின் வேகம் அதிகமாக இருக்கலாம்" என்றார்.
Horrible accident near Murugesh Palya signal, the bus driver ran over a two wheeler. The bus driver and conductor have run away . The scenes are horrible. One is barely breathing and one is assumed dead. @BMTC_BENGALURU pic.twitter.com/uc4y6s8hQ7
— Darshan🇮🇳 (@darshan221b) March 26, 2025
இதற்கிடையில், விபத்து காரணமாக பரபரப்பான பழைய விமான நிலைய சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

