Viral Video: ஒருத்தன் பார்த்த வேலை, அநியாயமாக பறிபோன உயிர், 3 பைக்குகள் மோதிக்கொண்ட கோர காட்சிகள்
Viral Video: போக்குவரத்து விதிமீறல் காரணமாக 3 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Viral Video: போக்குவரத்து விதிமீறல் காரணமாக 3 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோர விபத்து:
பீகாரில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில், ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அங்கு அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடந்தது என்ன?
வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணிக்கு போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரா அருகே நடந்த இந்த விபத்தின் காணொளியில், போக்குவரத்து விதிகளை மீறிய இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகளால் நடந்த கோர விபத்து முற்றிலுமாக பதிவாகியுள்ளது. அதன்படி, பைக் ஓட்டுநர் ஒருவர் நான்கு வழிச் சாலையின் ஒருபுறத்தில் இருந்து சாலையின் மறுபுறத்திற்கு செல்வதற்காக, சாலையின் குறுக்கே இருந்த டிவைடர் மீது ஏறி மறுபுறத்தை அடைகிறார். அதேநேரம், அந்த சாலையில் என்ன வாகனங்கள் எப்படி பயணிக்கின்றன என்பதை சற்றும் கவனிக்கமால் வண்டியின் வேகத்தை கூட்டியுள்ளார். அவரிடம் இருந்த பையை கவனித்தால், அவர் ஏதோ டெலிவரி பாயை போல தெரிகிறது.
कोईलवर के सकड्डी के पास अवैध कट से जा रही बाइक गलत लेन से जा रही बाइक से टकराईं #Bihar #BiharCrime #BiharNews #CCTV #Bhojpur #Ara #Accident #Bike pic.twitter.com/YhbG9XqQDE
— Yogesh Sahu (@ysaha951) February 28, 2025
வீடியோ வைரல்:
இதனிடயே, சாலையின் வலதுபுறத்தில் இருந்து தவறான வழியில் (ONE WAY) இருந்து, ஒரு இருசக்கர வாகனம் இரண்டு பேருடன் அதிவேகமாக வந்து, சாலையின் குறுக்கே வந்துகொண்டிருந்த டெலிவரி பாயின் இருசக்கர வாகனத்தின் மீது மோத, இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி கீழே விழுந்து சறுக்கி சென்றன. அப்போது, தவறான பாதையில் வந்த பைக், எதிரே மெதுவாக வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோத, அதிலிருந்தவரும் கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்று அவர்களுக்கு உதவியுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்:
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், தவறான வழியில் வந்த பைக்கை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. மூன்றாவது பைக்கை ஒட்டி வந்தவர் லேசான காயங்களுடன் தப்பிக்க, மற்ற இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என, அரசாங்கம் பல அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், அதை மீறி செயல்படுவது என்பதும், அதனால் உயிர்கள் பறிபோவதும் தொடர்கதையாகி வருகிறது.

