மேலும் அறிய

Annamalai: திமுகவின் மெகா நாடகம்! கருப்பு கொடியை கையில் எடுக்கும் பாஜக! அண்ணாமலை சொன்னது என்ன?

தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் திரு ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து நாளை தமிழக பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு என தமிழக பாஜக தலைவர் காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏழு மாநில முதல்வர்களுடன் இது குறித்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற உள்ளது, இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்..

திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும். அரசு அதிகாரிகளுக்கும். காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது படுகொலைகள் நடக்காத நாளே இல்லை பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை ஆனால், இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்

மெகா நாடகம்:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும் எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் திரு ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

இதற்கு முன்பாக நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் யாரும் மதிக்கவில்லை. இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார் 

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணி) இன்றி வாடிப் போயின் ஆனால் கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல முதலமைச்சர் திரு ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை தமிழக விவசாயிகளை விட அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது.  அவருக்கு மேகதாது அணை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல்கட்ட முடியாது  என்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்  அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் திரு DK சிவக்குமார் அவர்களுக்குத் தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக

முதல்வர் ஸ்டாலின் சாதித்தது என்ன?

முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை

தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம் இது தவிர தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன கடந்த 4 ஆண்டுகளில் முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் சாதித்தது என்ன?

அரிசி, பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது. மருத்துவக் கழிவுகளும், இறைச்சிக் கழிவுகளும் தான் கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்குள்ள தெரு நாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள். இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் திரு பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

தொடர்ந்து தமிழக மக்களுக்கும். தமிழகத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களை வைத்து தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் முதலமைச்சர் திரு ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் திரு ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து நாளை தமிழக பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

கருப்பு கொடி போராட்டம்:

தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும், நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு அவரவர் வீட்டு முன்பாக நின்று. தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் திரு ஸ்டாலினைக் கண்டித்து. கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை விமர்சித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat RatnaRahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK StalinNayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து -  விலை, எப்படி வேலை செய்யும்?
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
KKR vs RCB: நாளை தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: நாளை தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
Embed widget