அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - அவதியடையும் நோயாளிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தரங்கம்பாடி அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீரால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஃபெங்கல் புயல்
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஃபெங்கல் புயலாக மாறிய பின் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வரை புயலாக நீடித்து பின்னர் கரையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Fengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVE
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்நிலையில் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஃபெங்கல் புயல் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஃபெங்கல் புயல், புயலாகவோ அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ சென்னை - பரங்கிப்பேட்டை இடையே வருகின்ற நவம்பர் 30 -ஆம் தேதி கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னை பகுதியில் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்டமேன் அதில் கூறியுள்ளார்.
ஃபெங்கல் புயல்; வெளுத்து வாங்கிய மழை; போக்குவரத்து பாதிப்பு... திணறும் மரக்காணம்
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கே கடந்து வருவதால், சென்னையின் நீர்ப்பிடிப்புக்கு ஏற்ற மழை என்றும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வடக்கு நகர்வு காரணமாக 27 ஆம் தேதியான இன்று சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் 28 ஆம் தேதியான நாளையும் சென்னை மிதமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில் சூழ்ந்த மழைநீர்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தரங்கம்பாடி பகுதியில் காலை முதல் தற்போது வரை 51 மில்லி மீட்டர் (5 செமீ ) மழையானது பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வாக உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது.
Rain Update: கொந்தளிக்கும் கடல் - உடைந்து விழும் அபாயத்தில் டேனிஷ் கோட்டை சுவர்
இதன் காரணமாக இன்று சிகிச்சை பெறவந்த வெளி நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்கள் என அனைவரும் மருத்துவமனை உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் பெறும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் மருத்துவமனை முன்பு தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை நீர் தேங்காதவாறு அரசு மருத்துவமனை வளாகத்தை சீரமைக்க வேண்டும், வடிகால்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.