மேலும் அறிய

XEV 9e Cineluxe Edition: சினிலக்ஸ் எடிஷன் தேறுமா? பழசுக்கு என்ன வித்தியாசம்? புதுசா என்ன இருக்கு? புக்கிங் ஸ்டார்ட்

Mahindra XEV 9e Cineluxe Edition: மஹிந்த்ரா நிறுவனம் தனது XEV 9e காரின் சினிலக்ஸ் எடிஷனுக்கான முன்பதிவை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தொடங்கியுள்ளது.

Mahindra XEV 9e Cineluxe Edition: மஹிந்த்ரா நிறுவனத்தின் XEV 9e காரின் சினிலக்ஸ் எடிஷனின் விநியோகம் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த்ரா XEV 9e  சினிலக்ஸ் எடிஷன்:

மஹிந்த்ரா XEV 9e சினிலக்ஸ் எடிஷன் நிஜ உலக பயன்பாட்டிலேயே 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் வகையில், 79KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதன் விலை 29.35 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு எடிஷனுக்கான முன்பதிவை மஹிந்த்ரா நிறுவனம் தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ப்ராண்டின் விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக சென்றும், அல்லது ஆன்லைன் தளத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கான விநியோகமானது வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

XEV 9e சினிலக்ஸ் எடிஷன் - டிசைனில் வந்த மற்றம் என்ன?

சினிலக்ஸ் எடிஷனானது XEV 9e கார் மாடலின் டாப் ரேஞ்ச் மாடலான பேக் த்ரீ வேரியண்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அப்படியே முன்னெடுத்து செல்லப்படுகிறது. உட்புற டேஷ்போர்டில் மூன்று எச்டி ஸ்க்ரீன் லே-அவுட் ஆதிக்கம் செலுத்துகிறது. டால்பி அட்மாஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது.  காரின் ஆம்பியன்ஸை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, பெரிய பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது 16 மில்லியனுக்கும் அதிகமான வண்ண விருப்பங்களை பிரதிபலிக்கும் திறனை கொண்டுள்ளது. எனவே மனநிலை மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்றபடி காரின் உட்புற சூழலை தீர்மானிக்கும் வசதி காரின் ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் சினிலக்ஸ் எடிஷனானது தனித்துவமான சாடின் ப்ளாக் மற்றும் சாடின் ஒய்ட் என சாடின் ஃபினிஷை கொண்டுள்ளது. இவை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட செஸ்ட்நட் ப்ரவுன் மற்றும் நாக்டர்ன் ப்ளாக் ஸ்மூத்  க்ரெய்ன் லெதரேட் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

XEV 9e Cineluxe Edition: சினிலக்ஸ் எடிஷன் தேறுமா? பழசுக்கு என்ன வித்தியாசம்? புதுசா என்ன இருக்கு? புக்கிங் ஸ்டார்ட்

XEV 9e சினிலக்ஸ் எடிஷன் - டெக் அப்க்ரேட்கள் என்ன?

தொழில்நுட்ப வசதி அடிப்படையில், இந்த காரானது ஃப்ளாக்‌ஷீப் வசதிகளை அப்படியே பின்பற்றுகிறது. அதன்படி, ஆகுமெண்டட் ரியாலிட்டி ஹெட் அப் டிஸ்பிளே, ஐடெண்டிடி ட்ரைவர் மற்றும் ஆக்குபண்ட் மானிட்டரிங், ஆட்டோ பார்க் அசிஸ்ட் உடன் கூடிய ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க், 30 டிகிரி கேமரா சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கீ ஃபஞ்சனாலிட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை சூழலுக்கு ஒத்துப்போகும் வகையிலான ட்ரைவ் மற்றும் க்ளைமேட் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கேம்ப், கீப் உள்ளிட்டவை அடங்கும். கடந்த 2024ம் ஆண்டின் இறுதி முதல் சந்தையில் கிடைக்கும், XEV 9e மின்சார எஸ்யுவி பிரிவில் வலுவான தடத்தை பதிவு செய்து வருகிறது. ஆண்டின் சிறந்த பசுமை கார் என்ற விருதையும் 2026ல் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.

XEV 9e Cineluxe Edition: சினிலக்ஸ் எடிஷன் தேறுமா? பழசுக்கு என்ன வித்தியாசம்? புதுசா என்ன இருக்கு? புக்கிங் ஸ்டார்ட்

XEV 9e சினிலக்ஸ் எடிஷன் - வித்தியாசம் என்ன?

XEV 9e சினிலக்ஸ் எடிஷனானது ப்ரீமியம் மற்றும் நல்ல பயண அனுபவத்தை வழங்கக் கூடிய, பேக் த்ரீ ட்ரிம்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அடிப்படை கட்டமைப்பே அப்படியே தொடரும் சூழலில், தனித்துவமான ஆஸ்தெடிக் அப்டேட் மற்றும் வாழ்க்கை சூழலுக்கு உகந்த சாஃப்ட்வேர் அப்டேட் மூலம், தனிப்பயனாக்கத்திற்கான இடமாக காரை மாற்ற மஹிந்த்ரா முயற்சித்துள்ளது.

XEV 9e Cineluxe Edition: சினிலக்ஸ் எடிஷன் தேறுமா? பழசுக்கு என்ன வித்தியாசம்? புதுசா என்ன இருக்கு? புக்கிங் ஸ்டார்ட்

முக்கிய ஆஸ்தெடிக் மாற்றங்கள்:

  • இதில் வித்தியாசமான மேட்-ஸ்டைல் மொனோடோன் வண்ண விருப்பங்களை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, நிலையான எடிஷன்களில் இல்லாத சாடின் ப்ளாக், சாடின் ஓய்ட் ஆகியவற்றை பயனர்கள் தேர்வு செய்யலாம்
  • வழக்கமான வேரியண்டில் இருந்து வேறுபடுத்த இதன் ரியர் பில்லரில் ”சினிலக்ஸ்” என்ற பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது
  • நிலையான ஐவோரி வெள்ளை நிற தீமிற்கு மாற்றாக அடர்த்தியான செஸ்ட்நட் ப்ரவுன் மற்றும் நாக்டர்ன் ப்ளாக் என டூயல் டோன் தீம் பயன்படுத்தப்படுகிறது
  • நேர் எதிரான ப்ரவும் ஸ்டிட்சிங்குடன் முற்றிலும் கருப்பு நிற லெதரேட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன

XEV 9e Cineluxe Edition: சினிலக்ஸ் எடிஷன் தேறுமா? பழசுக்கு என்ன வித்தியாசம்? புதுசா என்ன இருக்கு? புக்கிங் ஸ்டார்ட்

தனித்துவமான லைஃப் ஸ்டைல் அம்சங்கள்:

  • நிறுத்தி வைத்திருக்கும்போது பயன்படுத்துவதற்காக கேம்ப் மோட், பார்கிங்கின்போது வாகனத்தின் வெப்பநிலையை சீராக பராமரிக்க கீப் மோட், வளர்ப்பு பிராணிகளுக்கான சொகுசு மற்றும் பாதுகாப்பிற்காக பாவ்பால் மோட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
  • புதிய கஸ்டமைஸ்ட் டிரைவ் மோடை அறிமுகப்படுத்துகிறது, இது ஓட்டுநர்கள் தனிப்பட்ட வாகன அமைப்புகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க அனுமதிக்கிறது.
  • வெளிப்புற கண்காணிப்பை உறுதி செய்ய, தொடர்ச்சியான டிஜிட்டல் வீடியோ ரிகார்டிங் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய செக்யூர் 360 ப்ரோ வசதியை பெறுகிறது
  • சீட், லைட்டிங் வசதிகள், டிஜிட்டல் கீ ஆகியவற்றை பயனாளருக்கு ஏற்றபடி சேமித்து வைக்க ப்ரொஃபைலை உருவாக்கும் வசதியும் உள்ளது. 

Frequently Asked Questions

மஹிந்த்ரா XEV 9e சினிலக்ஸ் எடிஷனின் விநியோகம் எப்போது தொடங்கும்?

மஹிந்த்ரா XEV 9e சினிலக்ஸ் எடிஷனின் விநியோகம் மார்ச் 10ஆம் தேதி முதல் தொடங்கும். விருப்பமுள்ளவர்கள் ப்ராண்டின் விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக சென்றும், அல்லது ஆன்லைன் தளத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மஹிந்த்ரா XEV 9e சினிலக்ஸ் எடிஷனின் விலை என்ன?

மஹிந்த்ரா XEV 9e சினிலக்ஸ் எடிஷனின் விலை 29.35 லட்சம் ரூபாய். இது 79KWh பேட்டரி பேக்குடன் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும்.

XEV 9e சினிலக்ஸ் எடிஷனில் என்னென்ன முக்கிய வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

சினிலக்ஸ் எடிஷன் தனித்துவமான சாடின் ப்ளாக் மற்றும் சாடின் ஒயிட் ஃபினிஷை கொண்டுள்ளது. மேலும், இது செஸ்ட்நட் ப்ரவுன் மற்றும் நாக்டர்ன் ப்ளாக் ஸ்மூத் க்ரெய்ன் லெதரேட் ஆப்ஷன்களுடன் வருகிறது.

XEV 9e சினிலக்ஸ் எடிஷனில் உள்ள தனித்துவமான லைஃப் ஸ்டைல் அம்சங்கள் என்ன?

கேம்ப், கீப், பாவ்பால் மோட் போன்ற புதிய லைஃப் ஸ்டைல் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கஸ்டமைஸ்ட் டிரைவ் மோட் மற்றும் செக்யூர் 360 ப்ரோ வசதியும் இதில் அடங்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Maruti 7 Seater: 32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
32KM மைலேஜில் புது 7 சீட்டரை களமிறக்கும் மாருதி? பட்ஜெட்டில் குடும்பங்களுக்கான கார் - முழு விவரம்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
Embed widget