மேலும் அறிய
Thiruvenkadu Swetharanyeswarar : கோலாகலமாக நடைப்பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்ட விழா!
Thiruvenkadu Swetharanyeswarar : திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் இந்திரவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேராட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் தேர் திருவிழா
1/6

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
2/6

சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும்.
3/6

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
4/6

இந்த ஆண்டு இந்திரப்பெருவிழா கடந்த பிப்ரவரி 2 -ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான 9 -ம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
5/6

திருதேர் திருவிழாவை முன்னிட்டு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் அடுத்தடுத்த மூன்று தேர்களில் எழுந்தருள திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
6/6

இதையடுத்து திருத்தேர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தது நிலையை அடைய உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் திருவெண்காட்டில் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நிறைவு நிகழ்வாக மார்ச் 3 ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும் 13 நாள் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழாவானது நிறைவு பெறுகின்றது.
Published at : 29 Feb 2024 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion