மழை, குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

Published by: ஜான்சி ராணி

ஜில்லு தண்ணீர்

ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதுதான். குளிர் நீர் தெரபி' எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

தசை வலியை போக்கும்

உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும்.

ஏன் குளிர்ந்த நீர் நல்லது?

குளிர்ந்த நீர் ரத்தநாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத் தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியா வசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும்.

குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும்.

லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றும்.கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.

தூக்கம்

குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைதியான தூக்கம்..

தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

மன அமைதி

ஏதேனும் பிரச்சினைகளை எதிர் கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந் தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மனநிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும்.

அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும்.

இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும். மன நிலையை செம்மைப் படுத்தவும் வழிவகுக்கும்.

நிபுணர்கள் சொல்வது என்ன?

குளிர்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்ப்பதே நல்லது. நாம் குளிக்கும் நீர் 25 டிகிரி வெப்ப நிலைக்கு மேல்தான் இருக்க வேண்டும்.