Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
ஃபெங்கல் புயல் சென்னை – பரங்கிப்பேட்டை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
![Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ! Heavy Rain in Chennai on Nov 29 and 30 Fengal Cyclone Expected to Cross Near Chennai Tamil Nadu Weatherman Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/a26aae5c5d26970746013b19ffc818c11732690051839332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை – பரங்கிப்பேட்டை அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரும் வெதர் மேனுமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது இன்று மாலை புயலாக உருமாற உள்ளது. இதற்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் சென்னை – பரங்கிப்பேட்டை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளரும் வெதர் மேனுமான பிரதீப் ஜான் இன்று வெளியிடுள்ள எக்ஸ் பதிவு:
’’காற்றழுத்த தாழ்வு மண்டலம் / புயல் நவம்பர் 30ஆம் தேதி வாக்கில் பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக் கூடும். இதனால் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும்.
கீழ்க்காணும் தகவல் அடிப்படையில் மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இன்று (நவம்பர் 27-ம் தேதி) - சென்னையில் லேசானது முதல் மிதமான மழை – வடக்கு நகர்வு
நாளை 28-ம் தேதி - சென்னைக்கு மிதமான மழை - வடக்கு நகர்வு
நவ.29 - சென்னைக்கு கன மழை - மேற்கு நகர்வு
30-ம் தேதி - சென்னைக்கு மிக கனமழை முதல் அதி கனமழை - மேற்கு நகர்வு
டிசம்பர் 1- சென்னைக்கு மிதமான மழை
டிச.2 - சென்னைக்கு மிதமான மழை
புயல் / காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்த பிறகு ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளுக்கு மழை கிடைக்கும்'’.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதை தவற விடாதீங்க: Fengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVE
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)