மேலும் அறிய

TVK Vijay: விஜய் ஜெயிக்க மாட்டார்.. அவருக்கு பெண்கள் ஆதரவு தருவது வேதனை.. ரவிகுமார் எம்.பி., விமர்சனம்!

அரசியல் கட்சியை எப்படி நடத்துவது, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது விஜய்க்கு தெரியாது என விழுப்புரம் எம்.பி., ரவிகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட  எம்.எல்.ஏ.,வாக மாட்டார்கள் என விழுப்புரம் எம்.பி., ரவிகுமார் விமர்சித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் விழுப்புரத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தங்களுடன் கூட்டணியில் ஈடுபட்டால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என சொன்னார்கள். ஆனால் தற்போது வரை யாருமே அவர்களுடன் கூட்டணி செல்லவில்லையே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “முதலில் விஜய் ஒரு நடிகர். திரைப் பிரபலம் அரசியலில் ஈடுபடுவது தவறு கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் அவர்களுக்கும் விஜய்க்கும் இருக்கும் வேறுபாடு உள்ளது. அதாவது அரசியல் மேடைக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் இருக்கும் வேறுபாட்டை அவர் இதுவரை உணரவில்லை. அரசியல் மேடையை படப்பிடிப்பு தளமாக தான் இதுவரை விஜய் கருதி வருகிறார். அந்த மேடையில் அவர் பேசுவதெல்லாம் நடிப்பு. அவர் எங்கு பேச வேண்டும், பேச்சில் இடைவெளி விட வேண்டும், எங்கே அழ வேண்டும் என்பதெல்லாம் முன்பே விஜய்க்கு கொடுக்கப்படுகிறது.

அதைப் பார்த்து விட்டு தான் அரசியல்வாதியாக உருவெடுக்காமல் இருக்கிறார். அதனால் அரசியல் கட்சியை எப்படி நடத்துவது, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது அவருக்கு தெரியாது. என்ன கொடுமை என்றால், விஜய் இந்த நாட்டுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவார் என இளைய தலைமுறையினர் பலர் அவரை பின்தொடர்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பலர் அவருக்கு ஆதரவாக பேசுவது வேதனையளிக்கிறது. அதனை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் படுதோல்வியடைவார். ஒரு இடத்தில் கூட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறாது. அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட 2026 சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.,வாக மாட்டார்கள். அதன்பிறகு விஜய் மீதான மாயை மாறிவிடும் என தெரிவித்தார். 

தொடர்ந்து அவரிடம், சட்டப்பேரவை தேர்தலில் தவெகவை தவிர மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிர களப்பணி ஆற்றி வருவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழக வெற்றிக் கழகம் ஒரு அரசியல் கட்சியே கிடையாது. அதன் தலைவர் விஜய் அரசியல் தலைவர் கிடையாது. அவர் எல்லா இடங்களிலும் நடிகராகவே தன்னை உணர்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன செய்வாரோ அதனை தேர்தல் சமயத்தில் விஜய் செய்வார். தேர்தல் வேலைகள் அவருக்கு மட்டுமல்ல கூட இருப்பவர்களுக்கும் தெரியாது. அரசியல் கட்சியாக தவெக உருப்பெருமா என்பதே சந்தேகம் தான்" என ரவிகுமார் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget