![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE Updates: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவெடுத்துள்ளது. மழை உள்ளிட்ட வானிலை நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
![Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம் Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/29/d3a24b289736427ba2459f5b63568def1732848612242224_original.png)
Background
Fengal Cyclone LIVE: தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராதீர் - புதுச்சேரி அரசு
புயல் கரையை கடப்பதால் இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரை பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்று புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது
ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்க உள்ளது புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் - வெதர்மேன் பிரதீப் ஜான்
ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நாளையே கரையை கடக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)