மேலும் அறிய

Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!

நாங்குநேரி சம்பவத்தில் உயிரிழந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது சாதிய மோதல் என முதலில் கருதப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குழப்பம் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாட்டை அலற விட்ட சம்பவம்

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இதனை ஒரு அஸ்திவாரமாக தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இப்படியான நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அலற விடும் அளவுக்கு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சம்பவம் ஒன்று மார்ச் 2ம் தேதி இரவு நடைபெற்றது. 

அங்கு களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் டீக்கடை ஒன்றில் மார்ச் 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளனர். அவர்களை துரத்திய கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளது. மேலும் எதிரில் எதேச்சையாக வந்தவர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. 

இந்த சம்பவத்தில் வட மாநில தொழிலாளி ஒருவரும், உள்ளூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரும் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

போலீசார் குவிப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது சாதிய மோதல் என முதலில் கருதப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணைக்கு வந்த போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட போலீசார் நாங்குநேரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றத்தை தணிக்க பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். 

இதனிடையே தங்கள் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. 

7 பேர் கைது

இந்த நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையில் கண்ணன், அந்தோணி மைக்கேல் ராஜ், உச்சிமாகாலி, வசந்தகுமார், சுப்பையா என்ற சுபாஷ், கல்யாணி, இசக்கிராஜா ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கல்யாணி, சுபாஷ் இருவரும் நாங்குநேரி மாணவர் சின்னதுரையை வீடு புகுந்து சாதிய ரீதியிலான தாக்குதல் நடத்தியதில் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. 

மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நவீன் வாழ்க என கோஷமிட்டதாக சொல்லப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த நவீன் வழக்கு ஒன்றின் காரணமாக ஊரை விட்டு வெளியே வாழ்ந்து வருகிறார். ஆனால் தான் இப்படி செய்யவில்லை என அவர் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தார். இதனிடையே நவீனுக்கு எதிராக செயல்படும் நபர் தான் மதுரை சிறையில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Embed widget