TVK Vijay: சங்கீதா டூ கூட்டணி - தவெகவிற்கு ஆதரவு என்ற பெயரில் சதி? தஞ்சையில் வாய் திறப்பாரா விஜய்?
TVK Vijay Campaign: மனைவி சங்கீதா உடனான விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், தஞ்சாவூரில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.

TVK Vijay Campaign: தமிழ்நாடு அரசியல் களத்தில் நிலவும் பல்வேறு கேள்விகளுக்கு, தவெக தலைவர் விஜய் இன்று பதிலளிப்பாரா? என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது.
தஞ்சாவூரில் தவெக கூட்டம் - விஜய் பங்கேபு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முட்டி அரசியல் களம் தகிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்பார்ப்புகளில் சிக்கியுள்ள, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. அதன்படி, அய்யாச்சாமிபட்டி சாலை பகுதியில் நடைபெறும், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இதில் க்யூஆர் கோட் கொண்ட 4 ஆயிரத்து 900 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதால், காவல்துறை சார்பில் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுபோக, கட்டுப்பாடுகளை மீறி ரசிகர்களும் விஜயை காண குவியக்கூடும் என்பதால், தவெக சார்பில் அங்கு தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்..
சங்கீதா டூ கூட்டணி - அடுக்கடுக்கான கேள்விகள்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் உடனான திரைமறைவு பேச்சுவார்த்தை உண்மைதானா? விஜய் - சங்கீதா இடையேயான விவாகரத்து மனு, அவரது மனைவி மீது இணையத்தில் முன்வைக்கப்படும் அறுவறுப்பான விமர்சனங்கள், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு என்ற குற்றச்சாட்டு மற்றும் ஊடகங்கள் மீது தவெக இணைய பிரிவினர் நடத்தி வரும் விமர்சனங்கள் என பல்வேறு கேள்விகளும், சர்ச்சைகளும் தவெகவை சுற்றி வருகிறது. இதுதொடர்பாக இன்றைய கூட்டத்தில் விஜய் பதிலளிப்பாரா? அல்லது வழக்கம்போல் திமுகவை விமர்சிப்பது மற்றும் சில கட்சிகளை மறைமுகமாக சாடுவது என, இன்றைய நிர்வாகிகள் சந்திப்பையும் முடித்துக்கொள்வாரா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. கட்சியின் தலைவராக இன்று வரை செய்தியாளர்களை சந்திக்காத விஜய், இன்னுமும் இதே நிலைப்பாட்டை கடைபிடித்தால் அது தேர்தலில் அவருக்கு சாதகமாக இருக்காது என்பதே பல அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
ஆதரவு என்ற பெயரில் சதி?
இதனிடையே, தவெக ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிலர் சமூக வலைதளங்களில் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் அக்கட்சி சார்பில் குற்றம்சாட்டியுள்ளனர். விஜயின் மனைவி சங்கீதா குறித்து சிலர் உள்நோக்கத்துடன் தவறான விமர்சனங்களை முன்வைப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் இந்த இழிவான செயலை செய்து விஜயின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சாடுகின்றனர். ஆளுங்கட்சியினர் உள்நோக்கத்துடன் விஜயின் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி, அவரை முடக்கப் பார்ப்பதாகவும், இதையனைத்தும் தவெக கடந்து வரும் என்றும் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கைக்கான பதில்களை தஞ்சாவூரில் விஜய் வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
























