மேலும் அறிய

Iran New Supreme Leader: கமேனியின் இடத்தை பிடித்த மொஜ்தாபா, ஈரானின் புதிய அதிகார மையம் - யார் இவர்? வாரிசா?

Iran New Supreme Leader Mojtaba: ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தாபா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Iran New Supreme Leader Mojtaba: ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் அழுத்தத்தின் பேரில் புதிய உச்சபட்ச தலைவராக மொஜ்தாபா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் தேர்வு?

ஈரானின் நிபுணர்கள் சபை, மறைந்த கமேனியின் மகனான மொஜ்தாபா கமேனியை, நாட்டின் புதிய உச்சபட்ச தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனை தலைமையிடமாக கொண்ட பாரசீக மொழி தொலைக்காட்சி நிறுவனமான ஈரான் இண்டர்நேஷனல் ரிப்போர்ட், “இஸ்லாமிய குடியரசின் தலைமை பதவியை ஏற்க, 56 வயதான மொஜ்தாபாவை மதகுருமார் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளதாக” செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த தலைவர் என்ற பட்டியலில் முதன்மையானவராக இருந்த இவர், கமேனியின் இரண்டாவது மகனாவார்.

அழுத்தத்தின் பேரில் பதவி?

ஈரானின் அரசியல் கட்டமைப்பை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, நாட்டின் வலிமையான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க பாதுகாப்பு படையாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) திகழ்கிறது. அந்த அமைப்பின் அழுத்தத்தின் பேரிலேயே தற்போது வல்லுநர் சபையானது மொஜ்தாபாவை புதிய உச்சபட்ச தலைவராக தேர்தெடுத்துள்ளதாக செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதகுருமார்கள் அடங்கிய சக்திவாய்ந்த அமைப்பான நிபுணர்கள் சபை, அரசியலமைப்பு ரீதியாக ஈரானின் அரசியல் அமைப்பில்  மிக உயர்ந்த அதிகாரமான உச்ச தலைவரை நியமித்து மேற்பார்வையிடும் பணிகளை கையாள்கிறது. இதுதொடர்பான நடவடிக்கையில், குழப்பமான சூழல் நிலவுவதால் ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனுபவம் வாய்ந்த,மொஜ்தாபாவை புதிய உச்சபட்ச தலைவராக தேர்ந்தெடுப்பதே, நல்ல முடிவு என IRGC அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

யார் இந்த மொஜ்தாபா கமேனி?

அடுத்த உச்சபட்ச தலைவர் பதவிக்கானபட்டியலில் மொஜ்தாபாவின் பெயர் இருந்தாலும், உயர் பதவியில் இருக்கும் மதகுரு இல்லை என்பதாலும், ஆட்சியில் அவருக்கு எந்த அதிகாரப்பூர்வ பங்கும் இல்லை என்பதாலும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக கருதப்பட்டது.  புரட்சிகர ஈரானின் வாரிசு அரசியல்  பெரிய அளவில் எதிர்க்கப்பட்டு வருவதும் அதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால்,  நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் அதன் பாசிஜ் தன்னார்வ துணை ராணுவப் படையுடனும் வலுவான தொடர்புகளைக் கொண்டிருந்ததன் விளைவாக, மொஜ்தாபா தனது தந்தையின் இடத்தை தற்போது அடைந்துள்ளார்.

 நடுத்தர பதவியில் இருந்த மதகுருவான மொஜ்தாபா, ஈரான்-ஈராக் போரின் போது தெஹ்ரானின் ஆயுதப் படைகளில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. கமேனி உச்சத் தலைவராக இருந்தபோது அவரது அலுவலகத்தை நடைமுறையில் திறம்பட நிர்வகித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் ஒரு முக்கிய அதிகார மையமாகவும் திரை மறைவில் செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சபட்ச தலைவரின் அதிகாரங்கள்:

ஈரானின் சிக்கலான ஷியா மதக் கோட்பாடு கட்டமைப்பின் அதிகார மையமாக உச்சபட்ச தலைவர் பதவி உள்ளது. அரசு விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் சக்தியை பெற்றுள்ளார். ஆயுதப் படைகளின் தலைமை தளபதியாக செயல்படுவதோடு, இஸ்லாமிய புரட்சிகர படையை மேற்கொள்வது உள்ளிட்ட அதிகாரங்களையும் கைவசம் வைத்திருப்பார்

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட புரட்சிகர காவல்படை, கமேனியின் பதவிக் காலத்தில் ஈரானின் அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதார நிறுவனங்களில் தனது செல்வாக்கை கணிசமாக விரிவுபடுத்தியது. அதன் ஆதரவுடனேயே தற்போதுய் மொஜ்தாபா புதிய உச்சபட்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் யார்?

ஈரானின் நிபுணர்கள் சபை, மறைந்த கமேனியின் மகனான மொஜ்தாபா கமேனியை புதிய உச்சபட்ச தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஜ்தாபா கமேனியின் தேர்வு எப்படி நிகழ்ந்தது?

நாட்டின் வலிமையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) அழுத்தத்தின் பேரிலேயே வல்லுநர் சபையானது மொஜ்தாபாவை புதிய உச்சபட்ச தலைவராக தேர்தெடுத்துள்ளதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

மொஜ்தாபா கமேனி யார்?

மொஜ்தாபா கமேனி, ஈரானின் தற்போதைய உச்சபட்ச தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனாவார். இவர் தனது தந்தையின் அலுவலகத்தை நிர்வகித்ததாகவும், அதிகார மையமாகவும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உச்சபட்ச தலைவரின் முக்கிய அதிகாரங்கள் என்ன?

உச்சபட்ச தலைவர் ஈரானில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மேலும், இவர் ஆயுதப் படைகளின் தலைமை தளபதியாகவும், இஸ்லாமிய புரட்சிகர படையை மேற்கொள்வது உள்ளிட்ட அதிகாரங்களையும் கைவசம் வைத்திருப்பார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
China Vs Israel America: ஈரானுக்கு ஆதரவாக நுழைந்த சீனா; இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ஈரானுக்கு ஆதரவாக நுழைந்த சீனா; இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Embed widget