மேலும் அறிய

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை எம்பி சுதாவிற்கு பூம்புகார் மீனவர் கிராம மக்கள் ஒன்றுகூடி விருந்து வைத்து நன்றி தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் விடுதலைக்காக அதிக முயற்சிகளை மேற்கொண்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிற்கு மீனவர்கள் ஊர்கூடி விருந்து வைத்து நன்றி தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 பைபர் படகுகளில் கடந்த மாதம் செப்டம்பர் 20 -ம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டிய நிலை அவர்கள் கரை திரும்பததால் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரியவந்தது.

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

37 மீனவர்கள் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர், இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் இருந்த, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை எம்பியிடம் மீனவர்கள் கோரிக்கை 

இந்நிலையில், மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி இலங்கையில் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள அனுரா குமாரா திசநாயகவுக்கு மயிலாடுதுறை அவர் கடிதம் ஒன்றை எழுதினார்.

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

இலங்கை அதிபருக்கு கடிதம் 

அந்த கடிதத்தில் இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்த எம்பி.சுதா மேலும் கடித்தில் கூறியதாவது: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இவர்கள் படகு கவிழ்ந்ததில் துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரரின் உடலை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள். இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்துகளை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது.

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் மற்ற இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்து படகுகளையும் கூடிய விரைவில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்திருந்தார். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கும் கடிதம் எழுதியிருந்தார். 

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 

இந்த நிலையில், அக்டோபர் கடந்த 4-ஆம் தேதி மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னர் திங்கள்கிழமை நள்ளிரவு விமான மூலம் அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்களை விமான நிலையத்தில் ஆர். சுதா எம்.பி. சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார்.

ஊரே சேர்ந்து மயிலாடுதுறை எம்பிக்கு விருந்து - ஏன் தெரியுமா?

எம்பிக்கு தடபுடலாக விருந்து 

இந்த சூழலில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதாவிற்கு இலங்கையில் இருந்து ஊர் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் விருந்து வைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இதற்காக மீன், நண்டு, இரால், கணவாய் என தடபுடலாக கடல் உணவு வகைகளை சமைத்து அவர்கள் பரிமாற மீனவர்களுடன் தரையில் அமர்ந்து அவர் உணவருந்தினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget