ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு போட்ட அரசு அதிகாரி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் பணி ஓய்வு பெற உள்ள நீர்வளத்துறை செயற்பொறியாளர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அறுசுவை விருந்து அளித்துள்ளார்.
பொதுவாக விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த துறை அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு சுமூகமான உறவு என்பது பெரும்பாலும் இருப்பதில்லை என்றே கருத்தே நிலவி வருகிறது. இதற்கு உதாரணமாக விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள பிரச்சினை குறித்து செய்தி அதிகளவில் வெளியாகும். சமீபத்தில் கூட வேளாண் அதிகாரிகள் ஒருவரிடம் விவசாயி ஒருவர் வாங்கிய உளுந்து விதைக்கான பில் ரசீது கேட்டபோது அவரை ஒருமையில் திட்டி மர சட்டத்தை கொண்டு அடிக்க சென்ற சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
இதுபோன்ற சூழலில் மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் துறையான நீர்வளத்துறை அதிகாரி தான் ஓய்வு பெறுவதை அடுத்து, தன் பணிக்காலத்தில் தன்னுடன் பயணித்த விவசாயிகளுக்கு அறுசுவை உணவு விருந்து அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளராக சண்முகம் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு வேண்டிய காவிரி நீரை வாய்க்கால்களில் பிரித்து தரும் முக்கியமான துறையாக பொதுப்பணித்துறை விளங்குகிறது. தண்ணீர் பற்றாக்குறை காலங்களிலும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் மழைக்காலங்களிலும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கவும், அவற்றை முறையாக வடிய வைக்கவும், பொதுப்பணி துறையின் செயல் முக்கியமானதாகும். இதனால் டெல்டா மாவட்டங்களில் மிகவும் சென்சிட்டிவான துறையாக நீர்வளத்துறை விளங்கி வருகிறது.
இந்தத் துறையின் மயிலாடுதுறை மாவட்ட தலைமை பதவியான செயற்பொறியாளர் பதவியில் மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வந்த சண்முகம் வருகின்ற ஜனவரி மாதம் 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெறுவதற்கு முன் செயற்பொறியாளர் பங்கேற்கும் கடைசி கூட்டம் என்பதால் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Chennai Port Trust School:உடற்கல்வி ஆரிசியர் பணி; வரும் 31-ம் தேதி நேர்காணல் - முழு விவரம்!
தொடர்ந்து மயிலாடுதுறையில் புகழ்பெற்ற தனியார் ஓட்டல் ஒன்றில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வடை, பாயசத்துடன் அறுசுவை விருந்து அளித்தார். அதிகாரி ஒருவர் மக்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது விவசாயிகளுக்கு அளித்த விருந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.