அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய விவகாரம்: 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த சரண்யா , தனலெட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை விமான நிலையத்தில், ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பாஜக-வினரும் கூட்டமாக கூட்டமாக இருந்தார்கள். அரசு சார்பில் முதலில் மரியாதை செலுத்திய பிறகு பாஜக-வினர் அஞ்சலி செலுத்துமாறு, அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்பு அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும்போது, அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோசங்கள் எழுப்பினர். அப்போது கூட்டத்தில் இருந்து அமைச்சர் காரின் மீது காலணியை பாஜகவினர் எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் அவனியாபுரம் காவல்துறையால் 7 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
#BREAKING | அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சுhttps://t.co/wupaoCz9iu | #Madurai #PTR #BJP @arivalayam @ptrmadurai pic.twitter.com/tX7Ox0ZpWR
— ABP Nadu (@abpnadu) August 13, 2022
I'll have more to say about yesterday's events later, but for now....
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) August 14, 2022
If the missing "Cinderella of the Old Airport Terminal", who was "allowed" hundreds of meters into the "secured" area along with tens of her party members🤔, wants her sandal back...my staff saved it for you pic.twitter.com/kgBUsNkHVo
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்