பரந்தூர் வர விஜய் திட்டம்.. காவல்துறை அனுமதி வழங்குவதில் சிக்கலா? நடப்பது என்ன ?
TVK Vijay: "பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடிவரும் மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளார்"

"தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டி வரும் கிராம மக்களை சந்திக்க, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கூறியுள்ளார் "
பரந்தூர் விமான நிலையம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விமான நிலையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராம மக்கள் எதிர்ப்பு
குறிப்பாக நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், 900 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயின் நிலைப்பாடு என்ன?
தமிழக வெற்றி கழகம் மாநாடு நடைபெற்ற போது பரந்தூர் விமான நிலையம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் விமான நிலைய திட்டங்கள் கூடாது என்று விஜய் அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்தவித நடவடிக்கையும் பரந்தூர் விவகாரத்தில் விஜய் எடுக்காமல் இருந்து வந்தார்.
இதையும் படிங்க: அப்போ தளபதி 69 அந்த படத்தோட ரீமேக் தானா ? உண்மையை சொன்ன விடிவி கணேஷ்
கட்சி துவங்கியதிலிருந்து களத்திற்கு வரவில்லை என்று விஜய் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நலத்திட்ட உதவிகள் கூட பனையூர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் விஜய் தன் மீது இருக்கும் குற்றச்சாட்டை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையிடம் அனுமதி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளது.
தவெக தலைவர் நடிகர் விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர் குழுவை சந்திக்க ஜனவரி மாதம் 19 அல்லது 20ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு அழுத்துள்ளார்.
மரபை தவிர்த்த விஜய்
ஒரு மாவட்டத்திற்கு ஒரு கட்சியின் தலைவர் வருகிறார் என்றால், சம்பந்தப்பட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தான் முன்னிருந்து அனுமதி பெறுவது, அதற்கான ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
இதையும் படிங்க: பெரியார் என்ன புரட்சி செய்தார்? தயாரா? - சவாலுக்கு கூப்பிடும் சீமான்!
ஆனால் விஜய் தரப்பில் இருந்தோ, அவருக்கு நெருக்கமான நபர்களை அனுப்பி போராட்டக் குழுவினரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். பொதுவான மரபு வழிகளை தவிர்த்து, தனக்கு நெருக்கமானவர்கள் விஜய் பெரிதும் நம்புவது இதன் மூலம் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
அனுமதி கிடைக்குமா?
கிராம மக்கள் 900 நாட்களுக்கு மேலாக இரவு நேர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், அவர்கள் முன்னெடுக்கின்ற பல போராட்டத்திற்கும் காவல்துறையினர் அனுமதி கொடுப்பது கிடையாது. பேரணி செய்ய அனுமதி கேட்டால் மறுப்பது, அதை மீறி போராட சென்றால், போராட்டும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
அதேபோன்று ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் போராட்டக் குழுவினரை சந்திக்க அனுமதி கொடுப்பது கிடையாது. இந்தநிலையில், பரந்தூர் மக்களை சந்திக்க விஜய் தரப்பு அனுமதி கேட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை தரப்பில் விஜய்க்கு, பரந்தூர் வருவதற்கு அனுமதி மறுக்கப்படவே வாய்ப்பு அதிகம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, மனு பரிசீலணையில் இருப்பதாகவே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

