மேலும் அறிய

Womens Reservation Bill: மக்களவையில் தாக்கலானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா

மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.

மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்படுள்ளது. இதன் மூலம் மகளிருக்கு  நாடாளுமன்ற மக்களவையில் 33% இட ஒதுக்கீடு செய்து அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதா இன்று அதாவது செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ற சிறப்பையும் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா பெற்றுள்ளது. 

மகளிர் இட ஒதுக்கீடு  மசோதா தொடர்பாக நாளை மக்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது.  பெரும்பாலான கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதால் மசோதா நிறைவேறுவது உறுதியாகியுள்ளது. நாளை மறுநாள் அதாவது வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இந்த இட ஒதுக்கீடு மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்படவேண்டும். அதேபோல் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்படவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா 3 பதவிக்காலங்களுக்கு நிலுவையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பின்னர் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும் பட்சத்தில் மக்களவையில் மகளிர் உறுப்பினர்களின் எண்ணிக்கை 181ஆக உயரும் என சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார். மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபின்னர்தான் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும், மகளிர் இடஒதுக்கீட்டால் எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது எனவும், மகளிர் இடஒதுக்கீட்டில் எஸ்.சி எஸ்.டி பிரிவு மகளிருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா வரலாறு:

  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1989 ஆம் ஆண்டு மே மாதம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை.
  • 1992 மற்றும் 1993ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் 72 மற்றும் 73 ஐ மீண்டும் அறிமுகப்படுத்தினார்.  இவை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடங்கள் மற்றும் தலைவர் பதவிகளை ஒதுக்கியது. மசோதாக்கள் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இப்போது நாடு முழுவதும் பஞ்சாயத்துகள் மற்றும் நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 15 லட்சம் பேர் பெண்கள். 
  • செப்டம்பர் 12, 1996 அன்று, அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 81வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெறத் தவறியதையடுத்து, கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. முகர்ஜி குழு தனது அறிக்கையை 1996 டிசம்பரில் சமர்ப்பித்தது. இருப்பினும், மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது. 
  • வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கம் 1998 இல் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை 12வது மக்களவையில் முன்வைத்தது. இருப்பினும், இந்த முறையும், மசோதா போதிய ஆதரவை பெறவில்லை.  பின்னர் 1999, 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த மசோதா வெற்றி பெறவில்லை.
  • ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசாங்கம்-1 காலத்தில்,  மீண்டும் கவனம் பெற்றது. 2004 ஆம் ஆண்டில், இந்த மசோதாவை பொது குறைந்தபட்ச திட்டத்தில் சேர்த்த அரசாங்கம்,  6 மே 2008 அன்று மசோதா காலாவதியாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 1996 கீதா முகர்ஜி கமிட்டியின் ஏழு பரிந்துரைகளில் ஐந்து இந்த மசோதாவின் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 

  • இந்த சட்டம் மே 9, 2008 அன்று நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு தனது அறிக்கையை டிசம்பர் 17, 2009 அன்று சமர்ப்பித்தது. பிப்ரவரி 2010 இல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முத்திரை கிடைத்தது. இறுதியில் இந்த மசோதா மார்ச் 9, 2010 அன்று பெருவாரியான ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இருப்பினும், இந்த மசோதா மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, இறுதியில் 2014 இல் மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியானது. ஆனால், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட / நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் காலாவதியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget