Morning Headlines: தடுப்பனை கட்ட கேரள அரசுக்கு தடை.. விறுவிறுப்பாக நடைபெறும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு.. முக்கியச் செய்திகள்
Morning Headlines May 25: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக காணலாம். முக்கியமான செய்திகளின் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- தொடங்கியது 6ம் கட்ட வாக்குப்பதிவு -58 தொகுதிகள், 11.13 கோடி வாக்காளர்கள் - தலைநகர் டெல்லி யாருக்கு?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 6ம் கட்டத்தில், 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி உள்ளது. நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நடைபெற்ற முதல் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகளில் முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம், 69.16 சதவிகிதம் மற்றும் சுமார் 63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை 429 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் படிக்க..
- வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினாரா காங்கிரஸ் எம்எல்ஏ? வைரலாகும் வீடியோ உண்மையானதா?
தோல்வி பயம் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் எம்எல்ஏ உடைத்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வாக்குப்பதிவு மையத்திற்குள் சிலர் நுழைவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தை போட்டு உடைப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்த அந்த 32 வினாடி வீடியோவில் மலையாள செய்தி நிறுவனமான ஏசியாநெட் நியூஸின் லோகோ இடம்பெற்றிருக்கிறது. அதோடு, மே 22ஆம் தேதி நடந்த சம்பவம் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- "மம்தா, பினராயி விஜயன் அரசுகள் கவிழ்க்கப்படும்" மீண்டும் புயலை கிளப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்!
பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இடைக்கால பிணையில் வெளியே வந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், பகீர் தகவலை தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து தான் விலகினால், அடுத்ததாக மம்தா, பினராயி விஜயன் அரசுகள் கவிழ்க்கப்படும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் படிக்க..
- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு
உரிய அனுமதியின்றி சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் மேற்கொள்வதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதன் கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசானது , சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நாளிதழில் வெளியான செய்திகள் அடிப்படையில், தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது. அதையடுத்து, இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில், கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கலிங்குதான் கட்டுகிறோம். மேலும் படிக்க..
- "கேரளாவை தடுத்து நிறுத்துங்க.. இல்லனா" டெல்லிக்கு பறந்த கடிதத்தில் முதலமைச்சர் கறார்!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க..