சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தென் மண்டல் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உரிய அனுமதியின்றி சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் மேற்கொள்வதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதன் கட்டுமான பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை:
கேரள அரசானது , சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நாளிதழில் வெளியான செய்திகள் அடிப்படையில், தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.
அதையடுத்து, இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில், கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கலிங்குதான் கட்டுகிறோம். இதை தடுப்பணைகளை போன்று எடுத்து கொள்ள கூடாது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமான பணிகளுக்கு தடை:
இந்நிலையில், எந்த கட்டுமான பணியாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றுதான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உரிய அனுமதி பெற்றிருந்தால், அதை அறிக்கையாகவும் சமர்பிக்கவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கை, ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலந்தி ஆறு:
சிலந்தி ஆறு என்பது தேனாரின் துணை நதியாகும். இது மூணாரின் மேற்கு சரிவு பகுதிகளில் உற்பத்தியாகி, அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் கலக்கும் இந்த சிலந்தி ஆற்றின் நீர் சுமார் 222 கிமீ பயணித்து கரூர் மாவட்டம் மாயனூர் அருகே திருமுக்கூடலில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்தநிலையில், சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்படுவதால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 55,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதாரமான உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து தடைபடும் என்று கூறி தமிழ்நாடு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள். மேலும், அணையை மூடக்கோரி திருப்பூர் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
”காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்கிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அமராவதி அணையில் இருந்தும், ஆற்றில் இருந்தும் ஏராளமான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அமராவதி ஆற்றுக்கு பாம்பாறு, சிலந்தி ஆறு, தேவாறு, சின்னாறு ஆகிய துணை ஆறுகள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கேரள அரசு கட்டி வருவது தான் சிக்கலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் கடிதம்:
இதற்கு முன்பு முதலமைசச்ர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான செய்திகள் தொடர்பாக மாண்புமிகு @CMOKerala அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்: pic.twitter.com/pE9Y665vzi
— M.K.Stalin (@mkstalin) May 23, 2024