Breaking LIVE: உக்ரைன் விவகாரம் - பிரதமர் மோடி சற்று நேரத்தில் ஆலோசனை
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்னே(52). நேற்று இவர் மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் காலமானார்.
உக்ரைன் விவகாரம் - பிரதமர் மோடி சற்று நேரத்தில் ஆலோசனை
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார். டெல்லியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது, அங்குள்ள இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 223 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 596 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 1 நபர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்று அதிகபட்சமாக 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் ராஜினாமா
நீலகிரி-ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து திமுகவை சேர்ந்த செல்வரத்தினம் ராஜினாமா
கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வென்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்
தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்றது.
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின் விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

