Tejas Aircraft: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானம் ; கூடுதல் தகவல்கள்...
Tejas Aircraft Accident: ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தானில் விபத்து:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இலகுரக போர் விமானமான தேஜஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி விமானத்திலிருந்து பேராசூட்டின் மூலமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
#WATCH | Rajasthan | A Light Combat Aircraft (LCA) Tejas of the Indian Air Force crashed near Jaisalmer today during an operational training sortie. The pilot ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/3JZf15Q8eZ
— ANI (@ANI) March 12, 2024
பயிற்சியின்போது விபத்து:
இந்த விபத்தானது, பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது என்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்தான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேஜாஸ் போர் விமானமானது பல்வேறு சூழல்களிலும் செயல்படக் கூடிய வகையில் , இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மோசமான வானிலை சூழலில் கூட திறம்பட செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு உள்ளிட்ட செயலபாடுகளை மேற்கொள்ளும் வகையிலும், எதிரிகளை தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், தேஜஸ் விமான வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தானது விமானியால் ஏற்பட்டதா அல்லது விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்பது குறித்தான தகவல் இனிதான் தெரியவரும்.