Headlines : கோவில்களில் தமிழில் அர்ச்சனை தடை இல்லை.. அயோத்திதாசருக்கு மணிமண்டபம்.. சில முக்கியச் செய்திகள்
Tamil News: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றார்
பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து 612 மாவட்டங்களுக்கும் இருந்தாலும், பெரும்பாலும் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள 100 மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் என்று ஐஐஎஸ்சி, பெங்களூரு, ஐஐடி மண்டி மற்றும் ஐஐடி கவுகாத்தி ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆதரவு பெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை கோவிட் தடுப்பூசிகள் போடப்படவுள்ள 535 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட உள்ளன. செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் 150-ஆவது ஆண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படும். கோவையில் வ.உ.சிக்கு சிலை, தூத்துக்குடியில் முதன்மைச் சாலைக்கு அவரது பெயர், அவர் எழுதிய புத்தகங்கள் மின்னாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
பன்முக ஆற்றலாளர் பண்டிதர் அயோத்திதாசரின் 175-ஆவது ஆண்டு விழா நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை தொடர்பான மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
Annai tamilil archanai Scheme: கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரப்படி, 1568 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு இடத்துக்கான மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் எம் எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், வாசிக்க: