"வஞ்சரம் டூ விரால் மீன்" இனி வித விதமா சாப்பிடலாம்.. தமிழகத்திற்கு வருகிறது நீர்வாழ் உயிரின பூங்கா!
தமிழ்நாட்டில் நீர்வாழ் உயிரின பூங்காவை அமைப்பதற்கு ரூபாய் 127.71 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன. இது மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மதிப்புச் சங்கிலியின் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பன்முக மீன்வளத்தை உள்ளடக்கியதாகும்.
தமிழ்நாட்டுக்கு அடிச்சது ஜாக்பாட்:
தரமான விதைகள் மற்றும் தீவன உற்பத்தி, அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய உள்கட்டமைப்பு, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பக் காப்பகம், அறிவு பரவலாக்கம், பொழுதுபோக்கு ஆகியவற்றின் மையமாக நீர்வாழ் உயிரின பூங்காக்கள் திகழ்கின்றன.
கடந்த நான்கு நிதியாண்டுகளில், (நிதியாண்டு 2020-21 முதல் நிதியாண்டு 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டு (நிதியாண்டு 2024-25) மொத்தம் ரூ.682.6 கோடி செலவில் மொத்தம் 11 ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்களை அமைக்க மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.
மத்திய அரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் நீர்வாழ் உயிரின பூங்காவுக்கு ரூபாய் 127.71 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) தமிழ்நாட்டிற்கு ரூ.1156.15 கோடி மதிப்பிலான 48 திட்டங்களுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
Aquaculture parks established under #PMMSY
— PIB India (@PIB_India) November 28, 2024
Integrated Aquaparks are developed under the Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) as hubs, comprising multifarious fisheries covering various aspects of fisheries and aquaculture value chain.
Inter-alia, Aquaparks are envisaged… pic.twitter.com/Tn0IQFs8tl
இதில் மத்திய அரசின் மொத்த பங்களிப்பு ரூ.448.65 கோடியாகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இதில் அடங்கும். மாநிலங்களவையில் இன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்த பதிலை அளித்தார்.
இதையும் படிக்க: Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?