News Today Live : கைதான அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE
Background
News Today LIVE in Tamil:
தமிழகத்தில் கோவிட்-19 மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெறுகிறது. 5-ஆவது கட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.
லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக கைதான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
#JUSTIN | உ.பி: லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக கைதான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
IPL Playoff: சென்னை அணி இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சென்னை அணி இன்று தில்லி அணியை எதிர்கொள்கிறது.
பண்டிகைகளை முன்னிட்டு 1,500 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, இன்று முதல், அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை சுமார் 1,500 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
T-23 புலியின் பெயரில் போலி வீடியோக்களைப் பகிர வேண்டாம் - அறிவுறுத்தும் வனத்துறை
T-23 புலியின் பெயரில் பரவும் வீடியோக்கள் நீலகிரி மக்களிடைடே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி வீடியோக்களைப் பகிர வேண்டாம் - அறிவுறுத்தும் வனத்துறை