மேலும் அறிய

Neet 2021 : நீட் 2021: சிறப்பு ஸ்ட்ரே கவுன்சிலிங் கோரும் மாணவர்கள்.. மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்

விண்ணப்பதாரர்கள் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், சிறப்பு கவுன்சிலிங்கை நடத்துவதற்கு மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளது.

நீட் 2021ல் அகில இந்திய ஒதுக்கீட்டின் (AIQ) கீழ் காலியாக உள்ள முதுகலை மருத்துவ இடங்களை நிரப்ப 
 உதிரி இடங்களுக்கான சிறப்பு சுற்றுக் கவுன்சிலிங்(Stray) கோரிய மருத்துவ மாணவர்களின் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக்கொண்டுள்ளது.

நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, விண்ணப்பதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் மனுவின் நகலை மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC), தேசிய தேர்வு வாரியம் மற்றும் மையத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

“மனுவின் முன்கூட்டிய நகலை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டிக்கு வழங்கவும், அவர் இந்த விஷயத்தில் அறிவுறுத்தல்களைப் பெறலாம். மனுதாரர், மனுவின் ஒரு முன்கூட்டிய நகலை மத்திய ஏஜென்சியிலும் வழங்கலாம்” என்று அமர்வு கூறியது.

இந்த வழக்கு ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அஸ்தா கோயல் மற்றும் பிறரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உதிரி இடங்களுக்கான சிறப்புச்சுற்று கவுன்சிலிங் நடத்தப்பட்ட பின்னர், காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், சிறப்பு கவுன்சிலிங்கை நடத்துவதற்கு மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளது.

ஆல் இந்தியா கோட்டவில் உதிரியிடங்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்ட பிறகு, காலியாக உள்ள இடங்களின் சரியான எண்ணிக்கையை வழங்குவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரினர்.

முன்னதாக, 

2022ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.  இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 

கோவிட் பாதுகாப்பு விதிகள்

சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்துத் தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஜூலையிலேயே தேரு நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்வுக்குத் தயாராக போதிய அவகாசம் இல்லை என்று தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். #NTAdeferNEETUG என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

இதுகுறித்து நீட் (இளங்கலை) - ஜேஇஇ மாணவர் சங்கம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்குச் சரியாக 10 மாதங்கள் கூட நேரம் கிடைக்கவில்லை. தேர்வு முடிவுகளை வெளியிடவும் கலந்தாய்வை நடத்தவும் வழக்கமான கால அளவைவிட அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அதிகாரிகளுக்காக மாணவர்கள் ஏன் அவதிப்பட வேண்டும்? NTAdeferNEETUG" என்று பதிவிட்டுள்ளது. 

மருத்துவப் படிப்புக்காகத் தயாராகும் தேர்வர் ஒருவர் கூறும்போது, "நீட் 2022 இளங்கலைத் தேர்வைத் தள்ளி வையுங்கள். தாமதமான கலந்தாய்வு எங்களின் தவறு அல்ல. எங்களுக்குத் தேவையான நேரத்தை தயவுசெய்து அளியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget