ரூபாய் 4 லட்சம் வரை ஆஃபர்.. ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள் - எந்த காருக்கு எவ்ளோ கம்மி?
ஆகஸ்ட் மாதத்திற்காக ஹுண்டாய் நிறுவனம் தங்களது கார்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூபாய் 4 லட்சம் வரை மொத்த விலையில் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகவும் முக்கியமான கார் சந்தைகளில் ஒன்று ஹுண்டாய். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கார் நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.
ஆடித்தள்ளுபடி விலையில் ஹுண்டாய் கார்கள்:
அந்த வகையில் முன்னணி கார் நிறுவனமான ஹுண்டாய் நிறுவனமும் ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு அதிகபட்சம் எவ்வளவு சலுகைகள் வரை இருக்கும் என்பதை கீழே காணலாம்.
1. Grand i10 Nios - ரூபாய் 70 ஆயிரம்
2. Aura - ரூபாய் 55 ஆயிரம்
3. Exter - ரூபாய் 55 ஆயிரம்
4. i20 (including i20 N Line) - ரூபாய் 65 ஆயிரம்
5. Venue (including Venue N Line) - ரூபாய் 85 ஆயிரம்
6. Verna - ரூபாய் 65 ஆயிரம்
7. Creta - ரூபாய் 5 ஆயிரம்
8. Alcazar Facelift - ரூபாய் 70 ஆயிரம்
9. Tucson - ரூபாய் 1 லட்சம்
10. Ioniq 5 (Only MY2024 Stock) - ரூபாய் 4.05 லட்சம்
ஹுண்டாய் அறிவித்துள்ள இந்த அட்டகாசமான தள்ளுபடி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. Grand i10 Nios, i20 போன்ற நடுத்தர குடும்பங்கள் பயன்படுத்தும் கார்களுக்கு தள்ளுபடி விலை அறிவித்திருப்பது பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
4.05 லட்சம் வரை தள்ளுபடி
அதேசமயம், பல்வேறு வசதிகள் கொண்ட வெனுயூ, கிரெட்டா, டக்சன் போன்ற கார்களுக்கு விலைகளை குறைத்திருப்பதும் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல்வேறு வசதிகள் கொண்ட அயோனிக் 5 காருக்கு ரூபாய் 4.05 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது பயனாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹுண்டாய் நிறுவனத்தின் இந்த தள்ளுபடி சந்தையில் அவர்களது விற்பனையை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். இந்தியாவின் மிகவும் குறைவான விலை காராக சந்தையில் உள்ள கிராண்ட் ஐ10 நியாஸ் காருக்கு ரூபாய் 70 ஆயிரம் வரை விலை குறைத்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரின் விலைகளை குறைத்துள்ள ஹுண்டாய் இந்த மாதம் அவர்களது புதிய கார்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த கார்களில் கிராண்ட் ஐ10 நியோஸ், ஐ20, வெனுயூ, கிரெட்டா போன்ற கார்கள் பல பயனாளர்கள் பயன்படுத்தும் கார்கள் ஆகும்.





















