"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
மகா கும்பமேளா, இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா 2025 தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரதத்தின் மாண்புகளையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது மிகவும் சிறப்பான நாள் என குறிப்பிட்டுள்ள மோடி, மகா கும்பமேளா, இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியுள்ளது என்றும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது என்றும் கூறியுள்ளார்.
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்"
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது, "பாரதத்தின் விழுமியங்களையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்
பிரயாக்ராஜில் தொடங்குகிற மகா கும்பமேளா 2025 எண்ணற்ற மக்களை, நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனிதமான சங்கமத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கிய மகா கும்பமேளா, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் என பலர் பங்கேற்பார்கள்.
மகா கும்பமேளா:
அந்த வகையில், பிரயாக்ராஜில் இன்று தொடங்கியுள்ள மகா கும்பமேளா, வரும் பிப்ரவரி 26ஆம் தேதி, புதன்கிழமை வரை தொடரும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான (விடுதலை) பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
A very special day for crores of people who cherish Bharatiya values and culture!
— Narendra Modi (@narendramodi) January 13, 2025
Maha Kumbh 2025 commences in Prayagraj, bringing together countless people in a sacred confluence of faith, devotion and culture. The Maha Kumbh embodies India’s timeless spiritual heritage and…
4,000 ஹெக்டேர் பரப்பளவில் கும்பமேளா மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வருகையைக் கையாள ஆற்றின் இரு கரைகளிலும் 25 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறை 2,700 AI-செயல்படுத்தப்பட்ட கேமராக்களை நிறுவியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த நீருக்கடியில் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது. மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஏழு அடுக்கு பாதுகாப்பு வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

